நாகப்பட்டினம் மாவட்டம் மயிலாடுதுறையில் மாவட்ட விளையாட்டுக் கழகம் சார்பில் மாவட்ட அளவிலான இறகு பந்து போட்டி நடைபெற்றது.
இதில் மயிலாடுதுறை, சீர்காழி, குத்தாலம், தரங்கம்பாடி ஆகிய நான்கு தாலுகாக்களை சேர்ந்த 45 பள்ளிகளில் இருந்து 90 மாணவ மாணவிகள் பங்கேற்று விளையாடினர்.
ஆண்கள், பெண்கள் பிரிவில் தனித்தனியாக நாக்அவுட் முறையில் நடைபெற்ற இப்போட்டியில் வெற்றிபெற்ற மாணவ மாணவிகள் தஞ்சை மண்டல அளவிலான போட்டிகளுக்கு தேர்வு செய்யப்பட்டனர்.