ETV Bharat / state

ஆதரவற்ற குழந்தைகளுடன் பொங்கல் கொண்டாடிய மாவட்ட ஆட்சியர் - பொங்கல் மற்றும் கரும்புத் துண்டுகள்

நாகை: அன்னை சத்யா அரசினர் குழந்தைகள் காப்பகத்தில் நடைபெற்ற பொங்கல் விழாவில் மாவட்ட ஆட்சியர் பிரவீன் நாயர் கலந்துகொண்டு அங்குள்ள ஆதரவற்ற குழந்தைகளுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடி மகிழ்ந்தார்.

nagapattinam
nagapattinam
author img

By

Published : Jan 14, 2020, 3:09 PM IST

நாகப்பட்டினம் மாவட்டத்தில் 2004ஆம் ஆண்டு ஏற்பட்ட சுனாமியின் போது பெற்றோர்களை இழந்த குழந்தைகள் அனைவரும் அன்னை சத்யா அரசு காப்பகத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்குத் தேவையான உணவு, உடை, கல்வி உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளையும் மாவட்ட நிர்வாகம் ஏற்படுத்திக் கொடுத்துள்ளது.

இந்நிலையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அங்குள்ள ஆதரவற்ற குழந்தைகளுடன் மாவட்ட ஆட்சியர் பிரவீன் நாயர் பொங்கல் பண்டிகையை கொண்டாடி மகிழ்ந்தார். அப்போது காப்பகத்தில் தங்கிப் படிக்கும் மாணவ, மாணவிகளிடம் தன்னம்பிக்கையோடும், வைராக்கியத்துடனும் நன்றாக படித்து வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்று பொங்கல் நன்னாளில் மனதார வாழ்த்துவதாக தெரிவித்தார்.

nagapattinam
ஆதரவற்ற குழந்தைகளுடன் பொங்கல் கொண்டாடிய மாவட்ட ஆட்சியர்

தொடர்ந்து அருகில் உள்ள அன்னை சத்யா முதியோர் இல்லத்தில் தங்கியிருக்கும் ஆதரவற்ற முதியோர்களைச் சந்தித்து அவர்களுடன் கலந்துரையாடி அவர்களுக்குத் தேவையான அனைத்து வசதிகளும் கிடைத்திடும் வகையில் மாவட்ட நிர்வாகம் எப்போதும் உறுதுணையாக இருக்கும் என மாவட்ட ஆட்சியர் உறுதியளித்தார்.

இவ்விழாவில், மாவட்ட வருவாய் அலுவலர் இந்துமதி, மாவட்ட சமூகநல அலுவலர் உமையாள் மற்றும் காப்பக பணியாளர்கள் குழந்தைகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க...

களைகட்டிய படுகர் இன மக்களின் ஹெத்தையம்மன் திருவிழா!

Intro:நாகையில் ஆதரவற்ற குழந்தைகளுடன் பொங்கல் கொண்டாடிய மாவட்ட ஆட்சியர்.
Body:நாகையில் ஆதரவற்ற குழந்தைகளுடன் பொங்கல் கொண்டாடிய மாவட்ட ஆட்சியர்.

நாகப்பட்டினத்தில் உள்ள அன்னை சத்யா அரசினர் குழந்தைகள் காப்பகத்தில் நடைபெற்ற பொங்கல் விழாவில் மாவட்ட ஆட்சியர் பிரவீன்
நாயர்
பங்கேற்று காப்பகத்தில்
உள்ள ஆதரவற்ற
குழந்தைகளுக்கு பொங்கல் மற்றும் இனிப்பு, கரும்புத் துண்டுகள் வழங்கி பொங்கல்
கொண்டாடினார்.

நாகப்பட்டினம் மாவட்டத்தில் 2004 ஆம் ஆண்டு ஏற்பட்ட சுனாமியின் போது
தாய், தந்தையர்கள் இழந்த குழந்தைகள் அன்னை சத்யா அரசு காப்பகத்தில்
தங்கவைக்கப்பட்டு அவர்க்கு தேவையான
உணவு, உடை, கல்வி உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளையும்,
மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்நிலையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அங்குள்ள ஆதரவற்ற குழந்தைகளுடன் மாவட்ட ஆட்சியர் பிரவீன் நாயர் பொங்கல் பண்டிகையை கொண்டாடி மகிழ்ந்தார். அப்போது
காப்பகத்தில் தங்கி
பயிலும் மாணவ, மாணவியர்களிடம் தன்னம்பிக்கையோடும், வைராக்கியத்துடனும்
நன்றாக படித்து வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்று பொங்கல் நன்னாளில் மனதார
வாழ்த்துவதாக தெரிவித்தார்.
தொடர்ந்து அருகில் உள்ள அன்னை சத்யா முதியோர் இல்லத்தில்
தங்கியிருக்கும் ஆதரவற்ற முதியோர்களை சந்தித்து, அவர்களுடன் கலந்துரையாடி,
அவர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் கிடைத்திடும் வகையில் மாவட்ட
நிர்வாகம் எப்போதும் உறுதுணையாக இருக்கும் என மாவட்ட ஆட்சியர் முதியோர்களிடம் உறுதியளித்தார்.

இவ்விழாவில், மாவட்ட வருவாய் அலுவலர் இந்துமதி, மாவட்ட
சமூகநல
அலுவலர்
உமையாள் மற்றும்
காப்பக
பணியாளர்கள்
குழந்தைகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.