தமிழ்நாட்டில் சட்டப்பேரவைத் தேர்தல் ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில், அனைவரும் ஜனநாயக கடமையாற்ற தவறாமல் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை தேர்தல் அலுவலர்கள் நடத்தி வருகின்றனர்.
மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகார் தொகுதிக்குட்பட்ட தரங்கம்பாடி தாலுக்காவில் சமையல் எரிவாயு சிலிண்டர்கள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
மாவட்ட தேர்தல் அலுவலர் பிரவீன் நாயர் உத்தரவின் பேரில் சமையல் எரிவாயு சிலிண்டர்களில் 'வாக்களிப்பது எனது உரிமை, எனது கடமை' என்ற வாசகம் அடங்கிய துண்டு பிரசுரங்கள் ஒட்டப்பட்டுள்ளன.
இதையும் படிங்க: ராமநாதபுரத்தில் களைகட்டிய பிரம்மாண்ட வாக்காளர் விழிப்புணர்வு ரங்கோலிப் போட்டி!