ETV Bharat / state

மீனர்வகளிடையே தகராறு - ஒருவர் உயிரிழப்பு - fisherist

தரங்கம்பாடி அருகே கடலில் மீன்பிடித்த சென்ற வானகிரி- புதுப்பேட்டை கிராம மீனவர்கள் இடையே தாக்குதலில் படுகாயமடைந்த ஒருவர் உயிரிழந்தார்.

மீனர்வகள் இடையே தகராறு - ஒருவர் உயிரிழப்பு

author img

By

Published : Apr 15, 2021, 8:24 PM IST

மயிலாடுதுறை: தரங்கம்பாடி தாலுகா புதுப்பேட்டை மற்றும் வானகிரி கிராமங்களைச் சேர்ந்த மீனவர்கள் இன்று (ஏப்ரல் 15) காலையில் சின்னங்குடி அருகே கடலுக்கு சென்று மீன் பிடிக்க சென்றுள்ளனர்.

மீனர்வகள் இடையே தகராறு - ஒருவர் உயிரிழப்பு

அப்போது, புதுப்பேட்டை மீனவர்கள் மீன்பிடிக்க வீசிய வலையின் மேல் வானகிரி மீனவர்கள் படகு உரசியது. இதனால், தங்களது வலை சேதமடையும் என புதுப்பேட்டை மீனவர்கள் எச்சரித்தனர்.

இதனையடுத்து, இரு கிராம மீனவர்களுக்கு இடையே வாய்த்தகராறு ஏற்பட்டது. இதில், ஆத்திரமடைந்த வானகிரி மீனவர்கள் புதுப்பேட்டை மீனவர்களை தாக்கியதாக கூறப்படுகிறது.

இந்த தாக்குதலில் புதுப்பேட்டை கிராம மீனவர் மூர்த்தி(45) என்பவர் மயங்கி விழுந்துள்ளார். சிகிச்சைக்காக காரைக்கால் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்தனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே மூர்த்தி இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவம் குறித்து, தரங்கம்பாடி கடலோர காவல் நிலைய காவல் துறையினர் புதுப்பேட்டை மற்றும் வானகிரி மீனவர்களிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

இதையும் படிங்க: கொடியங்குளம் கலவரம்: 'கர்ப்பிணிப் பெண்ணை பூட்ஸ் காலால் உதைச்சாங்க' - பத்திரிக்கையாளரின் நேரடி சாட்சியங்கள்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.