ETV Bharat / state

தருமபுரம் ஆதீனத்தில் நடந்த பட்டின பிரவேசம் விழா - ஏராளமானோர் பங்கேற்பு

தருமபுரம் ஆதீனத்தில் புகழ்பெற்ற பட்டின பிரவேசம் விழாவின் ஒரு பகுதியாக தங்க பாத குறடுடன், ஒட்டகம், யானைகள் படை சூழ வெள்ளி நாற்காலி பல்லாக்கில் தருமபுர ஆதீன மடாதிபதி, ஆதீனங்களின் வடக்கு குரு முகூர்த்த ஆலயங்களுக்கு எழுந்தருளும் நிகழ்ச்சி நடைபெற்றது.

author img

By

Published : May 21, 2022, 10:35 PM IST

பட்டின பிரவேசம் விழா
பட்டின பிரவேசம் விழா

மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள தருமபுரத்தில் தொன்மைவாய்ந்த 16ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த தருமபுரஆதீன திருமடம் அமைந்துள்ளது. இங்கு ஆண்டுதோறும் பல நூற்றாண்டுகளாக கடைபிடிக்கப்பட்டு வரும் பாரமபரிய பட்டணபிரவேச விழா குருமுதல்வர் குருபூஜைவிழா கடந்த 12ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

நாளை (மே 22) ஆதீனகர்த்தர் பட்டினப்பிரவேசம் நிகழ்ச்சி நடைபெறவுள்ள நிலையில் மடத்தில் சித்தியடைந்த முந்தைய ஆதினங்களின் 15 பேரின் குருமூர்த்தத்தில் (சமாதி அடைந்த இடத்தில் சிவலிங்கம் அமைக்கப்பட்டு கோயில்கள் உருவாக்கப்பட்ட இடம்) சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

காவிரிக்கரையில் ஆதீனத்திற்கு வடக்கு புறத்தில் உள்ள இந்த இடத்திற்கு வடக்கு குரு முகூர்த்தம் என்று பெயர். தொடர்ந்து இங்கு பூஜை செய்ய, பாரம்பரியமான முறைப்படி மதுரை ஆதீனகர்த்தர் மற்றும் கட்டளை தம்பிரான்கள் புடைசூழ, தங்க பாத குறடுடன், நற்காலி பல்லாக்கில் எழுந்தருளினார்.

திருக்கடையூர், மயிலாடுதுறை, திருவையாறு ஆகிய ஆலயங்களின் யானைகள் மற்றும் ஒட்டகம் அலங்காரபதாகைகள் சூழ தருமபுர ஆதீனம் 27வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகளை பக்தர்கள் குரு முகூர்த்தத்திற்கு தூக்கிச் செல்ல குருமூர்த்தத்தை அடைந்தார்.

பட்டின பிரவேசம் விழா

இதனை அடுத்து சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. நிகழ்ச்சியில் மதுரை மடாதிபதி, பிரபல கர்நாடக இசைப் பாடகர் சீர்காழி சிவசிதம்பரம் மற்றும் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வழிபாடு செய்தனர். ஒவ்வொரு குருமுகூர்த்த ஆலயத்திலும் அந்தந்த சித்தியடைந்த மடாதிபதிகளின் வாழ்க்கை வரலாறு விளக்கிக் கூறப்பட்டது. நாளை நடைபெற உள்ள பட்டணபிரவேசத்தை முன்னிட்டு தருமபுர ஆதீனமடம் விழாக்கோலம் பூண்டுள்ளது.

இதையும் படிங்க: மதுரையில் முனியாண்டி திருவிழா: 470 ஆடுகளை வெட்டி 10 ஆயிரம் பேருக்கு கறிவிருந்து!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.