நாகை : மயிலாடுதுறையில் சைவ மடங்களில் ஒன்றான தருமபுர ஆதீனத்தின்கீழ் 27 சிவாலயங்கள் உள்ளிட்ட பல கோயில்கள் நிர்வகிக்கப்பட்டு வருகின்றன.
ஆதீனத்திற்கு உட்பட்ட சிவாலயங்களில் உலக நன்மை வேண்டியும், கரோனா நோய்த்தொற்று நீங்க வேண்டியும் சிறப்பு ஹோமம் நடத்த தருமபுர ஆதீனத்தின் 27ஆவது குருமகாசந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் அறிவுறுத்தினார்.
ஸ்ரீ மகா பாசுபதாஸ்த்ர ஹோமம்
அந்தவகையில் மயிலாடுதுறையில் உள்ள ஸ்ரீஞானாம்பிகை உடனாகிய வதான்யேஸ்வரர் ஆலயத்தில் உலக நன்மை வேண்டியும், கரோனா தொற்று நீங்க வேண்டியும் ஸ்ரீ மகா பாசுபதாஸ்த்ர ஹோமம் நடைபெற்றது.
சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் ஓத யாகம் வளர்க்கப்பட்டு அஸ்திர தேவருக்கு சிறப்புப் பூஜைகள் செய்து மகா தீபாராதனை நடைபெற்றது.
தருமபுரம் ஆதீனம் முன்னிலையில் நடைபெற்ற இந்தச் சிறப்பு ஹோமத்தில் குறைந்த அளவிலான பக்தர்கள் பங்கேற்று வழிபாடு செய்தனர்.
இதையும் படிங்க:
மதுரையின் மாஸ்டர் பிளானை மாற்றி அமைப்பது குறித்து தமிழ்நாடு அரசு பதிலளிக்க உத்தரவு