மயிலாடுதுறை: சீர்காழி அடுத்த வைத்தீஸ்வரன் கோவிலில் தருமபுரம் ஆதீனத்துக்கு உட்பட்ட தையல்நாயகி அம்பாள் உடனாகிய வைத்தியநாத சுவாமி கோயில் உள்ளது. இக்கோயிலில் ஆடி மாத கிருத்திகை சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
முன்னதாக கிருத்திகை மண்டபம் எழுந்தருளிய செல்வமுத்துக்குமார சுவாமிக்கு பால், இளநீர், தேன், தயிர், பஞ்சாமிர்தம், பன்னீர், சந்தனம் முதலான 51 வகை நறுமண திரவிய பொருட்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து மலர்களால் அலங்கரிக்கப்பட்டு சண்முகா அர்ச்சனை நடைபெற்று மகா தீபம் காட்டப்பட்டது.
இதில் தருமபுரம் ஆதீனம் 27ஆவது குருமகாசந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் பங்கேற்று சாமி தரிசனம் செய்து பக்தர்களுக்கு அருட்பிரசாதம் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் பல்லாயிரம் கணக்கானோர் பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வழிபாடு நடத்தினர்.
இதையும் படிங்க: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் ஆடிபூரம் பிரம்மோற்சவம் கொடியேற்றம்