மயிலாடுதுறை: வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக கடலோர டெல்டா மாவட்டத்தில் அதீத கன மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்த நிலையில் நேற்று (நவ-11)இரவு முழுவதும் சீர்காழி சுற்றுவட்டார பதில் அதிகப்படியான கனமழை பெய்ததால் தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகள் மற்றும் விளை நிலங்களில் அதிக அளவு மழைநீர் தேங்கியுள்ளது.
அதிகபட்சமாக சீர்காழியில் மட்டும் இந்த ஆண்டில் இல்லாத வகையில் ஒரே நாளில் 45 சென்டிமீட்டர் மழை பதிவானதால் சீர்காழி சட்டைநாதர் கோயில், பிரம்மபுரீஸ்வரர் கோயில் தர்ம தீர்த்த குளத்தில் மழைநீர் அதிக அளவு நிரம்பியதால் கோயில் உள்பிரகாரம் முழுவதும் மழைநீர் சூழ்ந்துள்ளது. இதனால் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய முடியாமல் தவித்து வருகின்றனர். மேலும் மழைநீரை விரைவாக வெளியேற்ற நடவடிக்கை எடுக்கவும் கோரிக்கை விடுத்தனர்.
இதையும் படிங்க:வடகிழக்கு பருவமழை 15% அதிகரிப்பு: வானிலை ஆய்வு மையம்