ETV Bharat / state

குட்கா விற்பனையாளர்கள் யார் என்பது காவல்துறைக்கு நன்றாக தெரியும்: விக்ரமராஜா பரபரப்பு புகார் - GST

A.M.Vikramaraja: காவிரி டெல்டா மாவட்டங்களில் நடைபெற உள்ள கடையடைப்பு போராட்டத்தில் பங்கேற்பது குறித்து கும்பகோணத்தில் நாளை முடிவெடுக்கப்படும் என்று வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில தலைவர் ஏ.எம்.விக்ரமராஜா தெரிவித்துள்ளார்.

காவிரி டெல்டா மாவட்ட கடையடைப்பு போராட்டத்தில் பங்கேற்பது குறித்து நாளை முடிவெடுக்கப்படும் என ஏ.எம்.விக்ரமராஜா தெரிவித்துள்ளார்.

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 9, 2023, 9:04 PM IST

காவிரி டெல்டா மாவட்ட கடையடைப்பு போராட்டத்தில் பங்கேற்பது குறித்து நாளை முடிவெடுக்கப்படும் என ஏ.எம்.விக்ரமராஜா தெரிவித்துள்ளார்.

மயிலாடுதுறை: மயிலாடுதுறையில் நடைபெற்ற சேம்பர் ஆஃப் காமர்ஸ் புதிய பொறுப்பாளர்கள் பாராட்டு விழாவில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில தலைவர் ஏ.எம்.விக்ரமராஜா சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு புதிய பொறுப்பாளர்களுக்கு பாராட்டு தெரிவித்து பேசினார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், “ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்ட காலம் தொடங்கி, உணவு தானிய பொருளுக்கான வரியை 5 சதவீதமாக தளர்த்த வேண்டும் என தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு வலியுறுத்தி வந்த நிலையில், தற்போது சிறுதானிய உணவுப் பொருட்களுக்கான வரியை மத்திய அரசு 5 சதவீதமாக குறைத்துள்ளது வரவேற்கத்தக்கது.

அதேபோல ஜிஎஸ்டி வரி 28%, 18%, 12% என உள்ளதை இரண்டே வரி விதிப்பாக மாற்றி அமைத்தால் 140 கோடி மக்களும் வரி செலுத்துவார்கள். இதன்மூலம் வரி வருவாய் அதிகரிக்கும். மேலும் ஜிஎஸ்டி சட்ட விதிகளையும் எளிமைப்படுத்த வேண்டும். அதேபோன்று பண்டிகை காலங்களில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் கடைகளிலே சோதனை செய்வதை விட்டுவிட்டு பொருள்கள் உற்பத்தி செய்யும் இடத்தில் சோதனை செய்து தரமான பொருள் சந்தைக்கு கொண்டு வர வேண்டும்.

அப்படி இல்லை என்றால் தரமில்லாத பொருளை உற்பத்தி செய்கின்ற எந்த நிறுவனமாக இருந்தாலும் அரசு அங்கேயே நடவடிக்கை எடுக்க வேண்டுமே தவிர, சாமானிய வணிகர்களின் மீது நடவடிக்கை எடுத்து வணிக வாழ்வாதாரத்தை இழக்கக்கூடிய நிலையை ஏற்படுத்த வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறோம். ஏனெனில் ஏற்கனவே ஆன்லைன் நிறுவனங்கள் வணிகர்களை சுரண்டி வருகிறது.

எனவே அரசும், அரசுத்துறை அதிகாரிகளும் வணிகர்களை பாதுகாக்க வேண்டும். காவிரி டெல்டா மாவட்டங்களில் கடையடைப்பு அறிவித்துள்ளார்கள். இதில் பங்கேற்பது குறித்து நிர்வாகிகளிடம் ஆலோசித்து வணிகர் சங்கங்களின் பேரமைப்பு நாளை (அக்.10) கும்பகோணத்தில் முடிவை அறிவிக்கும்.

தமிழகத்துக்கு திருப்பி செலுத்த வேண்டிய ஜிஎஸ்டி தொகையை மத்திய அரசு செலுத்தினால் தமிழகம் செழிப்பாக இருக்கும். இதனை தமிழக முதலமைச்சர் பிரதமரிடம் வலியுறுத்த வேண்டும். எங்களைப் போன்ற சங்கத்தினரும் வலியுறுத்துவோம். தமிழகத்தை சுற்றியுள்ள அண்டை மாநிலங்களில் குட்கா பொருள்கள் பயன்படுத்தப்படுகிறது.

வெளி மாநிலத்திலிருந்து கோடிக்கணக்கான இளைஞர்கள் தமிழகத்தில் வேலை செய்கிறார்கள். அவர்கள் வேலைக்கு வரும்போது குட்கா பொருள்களை இங்கு கொண்டு வருகின்றனர். ஆனால் அரசு இரண்டு பாக்கெட் வைத்திருக்கும் சாமானிய சில்லரை வியாபாரிகளை பிடித்து சிறையில் அடைக்கும் நிலை உள்ளது.

மொத்த வியாபாரி யார் என்று காவல்துறையினருக்கு நன்றாக தெரியும். அவர்களைப் பிடித்து சிறையில் அடைக்க வேண்டும். அதேபோல, வியாபாரிகளும் அரசால் தடை செய்யப்பட்ட பொருள்களை விற்பனை செய்யக் கூடாது” என்று கூறினார். இதில் வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாவட்ட தலைவர் தமிழ்ச்செல்வன், சேம்பர் ஆப் காமர்ஸ் நிர்வாகிகள் மதியழகன், சிவலிங்கம் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க: டெல்லிக்குத்தான் ராஜா, தமிழ்நாட்டில் கூஜாதான்.. பாஜகவை விமர்சித்த கடம்பூர் ராஜூ

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.