நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் நேற்று ரஜினி மக்கள் மன்றத்தின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அதற்கு மாவட்ட செயலாளர் டி.எல். ராஜேஸ்வரன் தலைமை வகித்தார். அக்கூட்டத்தில், அண்மையில் ரஜினிகாந்த் அறிவித்த ரஜினி மக்கள் மன்றத்தின் கொள்கைகளான கட்சிக்கு மட்டும் ரஜினிகாந்த் தலைமை, இளைஞர்களுக்கு வாய்ப்பு, முதலமைச்சர் வேட்பாளராக வேறு ஒருவரை நியமித்தல் உள்ளிட்டவைகளை மக்கள் மத்தியில் பரப்ப தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மேலும் அக்கூட்டத்தில் இதனை துண்டு பிரசுரங்கள், கிராமங்களில் திண்ணைப் பிரசாரம், வாகனங்களில் எல்இடி திரை அமைத்தல் ஆகியவற்றின் மூலம் நிறைவேற்றப்போவதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இதையும் படிங்க: அரசியல் பிரவேசம் குறித்து ரஜினி ட்வீட்