நாகை மாவட்டம், பூம்புகார் அருகே வானகிரி மீனவ கிராமத்தில் ரேணுகாதேவி எல்லையம்மன் கோவிலில் நேற்று காலை கும்பாபிஷேகம் நடைப்பெற்றது. இதில், பூம்புகார், வானகிரி, கிராமங்கள் மட்டுமின்றி, நாகை மாவட்டத்தின் 40க்கும் மேற்பட்ட பல்வேறு மீனவ கிராமங்களில் இருந்து ஆயிரக்கணக்கான மீனவ மக்கள் கலந்து கொண்டுடனர். விழாவில் அப்பகுதியில் விற்பனை செய்யப்பட்ட ஐஸ் மற்றும் ஐஸ்கிரீம் சாப்பிட குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் மதியத்திலிருந்து வாந்தி எடுத்து மயக்கம் அடைந்துள்ளனர்.
இதையடுத்து பாதிக்கப்பட்ட 70 குழந்தைகள், சிறுவர்கள் உள்ளிட்ட 80 பேர் மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அவர்களுக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். குழந்தைகள் சாப்பிட சுவாதிகா என்ற நிறுவனத்தின் பேரில் உள்ள ஐஸ்கிரீம் பாக்கெட்டில் தயாரிப்பு மற்றும் காலாவதி தேதி குறிப்பிடாமல் இருந்தது குறிப்பிடத்தக்கது.
Conclusion: