ETV Bharat / state

பட்டியலின சமூகத்தினரின் வீடுகள் அழிப்பு... போலீஸ் குவிப்பால் பரபரப்பு! - dalit house destroyed in nagapattinam

தரங்கம்பாடியில் புறம்போக்கு நிலத்தில் பட்டியலின குடும்பத்தினர் அமைத்திருந்த குடிசைகளை, மற்றொரு சமுதாயத்தினர் பிடுங்கி எறியும் காணொலி வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

dalit-
வீடுகள் அழிப்பு
author img

By

Published : Aug 11, 2021, 6:19 AM IST

மயிலாடுதுறை மாவட்டம் நரசிங்கநத்தம் ஊராட்சி கீழக்காலனி, சாமியாங்குளம் ஆகிய கிராமத்தில் வாய்க்கால் புறம்போக்கு நிலத்தில் பல ஆண்டுகளாக 40க்கும் மேற்பட்ட பட்டியலினத்தவர் குடிசை அமைத்து வசித்து வருகின்றனர்.

இவர்கள் பட்டா கேட்டு காத்திருக்கும் நிலையில், நரசிங்க நத்தம் களம் புறம்போக்கு பகுதியில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமைப்பதாகக் கூறி ஜேசிபி வாகனம் கொண்டு மற்றொரு தரப்பினர், சுத்தம் செய்துள்ளனர்.

இந்நிலையில், அப்பகுதிக்கு வந்த பட்டியலின பிரிவினர், 25க்கும் மேற்பட்ட குடிசைகளை அமைத்தனர். இச்சம்பவம் தொடர்பாக வருவாய்த் துறையினர், பெரம்பூர் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.

பட்டியலினத்தவர் வீடுகள் அழிப்பு

அப்போது அங்கு வந்த மற்றொரு தரப்பினர் குடிசைகளை அடித்து நொறுக்கிப் பிய்த்து எறிந்தனர். இதனால், இரண்டு தரப்புக்கும் இடையே மோதல் ஏற்படும் சூழல் ஏற்பட்டதைத் தொடர்ந்து, காவல் துறையினர் குவிக்கப்பட்டனர்.

தொடர்ந்து தரங்கம்பாடி தாசில்தார் ஹரிதரன் முன்னிலையில் வருவாய்த் துறையினர் மீதம் இருந்த குடிசைகளை அகற்றினர். பிரச்னை ஏற்படாமல் இருக்கப் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. குடிசைகள் மீது ஒரு பிரிவினர் தாக்குதல் நடத்தும் காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: எஸ்.பி.வேலுமணி வீட்டில் ரெய்டு - அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.