ETV Bharat / state

புனித வெள்ளியன்று பக்தர்களின்றி கலையிழந்த வேளாங்கண்ணி பேராலயம்! - Velankanni church

நாகை: ஊரடங்கு உத்தரவால் நேற்று புனித வெள்ளி நாளில் உலகப்புகழ் பெற்ற வேளாங்கண்ணி பேராலயம் பக்தர்களின்றி வெறிச்சோடி காணப்பட்டது.

covid-19-velankanni-church-completely-desereted-on-good-friday

author img

By

Published : Apr 12, 2020, 11:28 AM IST

நாகை மாவட்டத்தில் உள்ள உலகப் புகழ்பெற்ற வேளாங்கண்ணி பேராலயத்தில் புனித வெள்ளி சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம். ஆனால், இம்முறை ஊரடங்கு உத்தரவால் மார்ச் 20 ஆம் தேதி முதல் வேளாங்கண்ணி பேராலயம் மூடப்பட்டது மட்டுமின்றி, பக்தர்கள் வருகைக்கான அனுமதியும் தடை செய்யப்பட்டது.

ஊரடங்கு உத்தரவை மக்கள் கடைப்பிடித்துவருவதால், நேற்று வேளாங்கண்ணி பேராலயத்தில் பக்தர்களின்றி வெறிச்சோடி காணப்பட்டது. பூட்டியிருந்த பேராலயத்தில் சிலுவை முத்தி செய்யும் நிகழ்வு ரத்து செய்யப்பட்டு, மூன்று பாதிரியார்கள் மட்டுமே பங்குப் பெற்ற புனித வெள்ளி சிறப்பு திருப்பலி நடைபெற்றது.

பக்தர்களின்றி வெறிச்சோடி காணப்படும் வேளாங்கண்ணி பேராலயம்!

பேராலயப் பங்குத்தந்தை சூசைமாணிக்கம் தலைமையில் நடைபெற்ற சிறப்பு திருப்பலியில் உலக மக்கள் நலம் பெற வேண்டியும், கரோனா வைரஸ் தொற்றிலிருந்தும் மக்கள் மீண்டுவர வேண்டியும் பிரார்த்தனை செய்யப்பட்டது.

இதையும் படிங்க: சரக்குக்கு பதில் சானிடைசர் குடித்தவர் உயிரிழப்பு!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.