ETV Bharat / state

நாகையில் கரோனா வைரஸ் பாதிப்பு அதிகரிப்பு - நாகையில் ஒரே நாளில் 12 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி

நாகப்பட்டினம்: கரோனா வைரஸ் தொற்று உறுதியானவர்களின் எண்ணிக்கை 12 லிருந்து 24 ஆக உயர்ந்துள்ள நிலையில், நாகப்பட்டினம் மக்கள் மிகுந்த அச்சமடைந்துள்ளனர்.

nagapattinam
nagapattinam
author img

By

Published : Apr 12, 2020, 1:06 PM IST

நாளுக்கு நாள் நாட்டையே அச்சுறுத்திவரும் கரோனா வைரஸ் தொற்றால் நாகப்பட்டினம் மாவட்டத்தில் இதுவரை 24 பேர் பாதிக்கப்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. முன்னதாக சமய மாநாட்டிற்கு சென்று திரும்பியவர்களில் 11 பேருக்கும், தனியார் மருத்துவர் ஒருவருக்கும் கரோனா வைரஸ் நோய் தொற்று உறுதியானது.

இந்நிலையில் சமய மாநாட்டிற்கு சென்று தொற்று உறுதியானவர்களின் உறவினர்கள் பரிசோதனை செய்யப்பட்டு தனிமைப்படுத்தபட்டு கண்காணிப்பில் இருந்தனர்.

அவர்களது ரத்த மாதிரிகளை பரிசோதித்ததில் 12 பேருக்கு கோவிட் -19 வைரஸ் இருப்பது உறுதியாகியுள்ளது. இதில், நாகூரைச் சேர்ந்த 3 பேருக்கும், திட்டச்சேரியைச் சேர்ந்த 9 பேருக்கும் கரோனா நோய் தொற்று உறுதியாகியுள்ளது.

இதனையடுத்து, வீட்டு கண்காணிப்பில் இருந்தவர்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம், பாதுகாப்பாக திருவாரூர் மருத்துவக் கல்லூரிக்கு அழைத்து செல்லப்பட்டனர்.

தற்போது, நாகூர் மெயின் ரோடு மற்றும் தொற்று ஏற்பட்டவர்கள் வசிக்கும் பகுதிகளில் கிருமி நாசினி தெளிக்கும் பணிகளில் நகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.

மேலும், நாகப்பட்டினத்தில் நேற்று (ஏப்ரல் 11) மட்டும் 12 பேருக்கு கரோனா நோய் தொற்று உறுதியான நிலையில், மொத்த எண்ணிக்கை 24 ஆக உயர்ந்துள்ளது. இதனால் நாகப்பட்டினம் மக்கள் மிகுந்த அச்சமடைந்துள்ளனர்.

இதையும் படிங்க: எலிகளுக்கு உணவாகும் கிர்ணி பழம் - விவசாயிகள் வேதனை

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.