நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகேயுள்ள பாலையூர் காவல்நிலையத்திற்கு நான்கு தினங்களுக்கு முன்பு கோமலையைச் சேர்ந்த 36 வயதுடைய ஆசிரியர் ஒருவர் புகார் கொடுக்கச் சென்றுள்ளார்.
பக்கத்து வீட்டுக்காரருக்கும் தனக்கும் இடத் தகராறு இருப்பதாக அந்தப் புகாரில் தெரிவித்திருந்தார். இந்தப் புகாரின் அடிப்படையில் காவலர்கள் விசாரணை நடத்திவருகின்றனர்.
இந்நிலையில் காவல்நிலையம் வந்து புகாரளித்த ஆசிரியருக்கு கரோனா பாதிப்பு உறுதியானது. இதையடுத்து அவருக்கு மயிலாடுதுறை அரசுமருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது.
இதையடுத்து சம்மந்தப்பட்ட ஆசிரியர் காவல்நிலையத்தில் புகாரளிக்கும் போது பணியிலிருந்த 5 காவலர்கள், 6 ஊர்க்காவல் படை வீரர்கள் உள்பட 11 பேரும் தனிமைப்படுத்தப்பட்டனர்.
கோமலை பகுதியைச் சேர்ந்த ஆசிரியர் பிகார் மாநிலத்திலிருந்து திரும்பியவர் ஆவார்.
இதையும் படிங்க: அதிகரிக்கும் கரோனா: மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை நடத்த இருக்கும் முதலமைச்சர்