தமிழ்நாட்டில் கரோனா தொற்றின் இரண்டாவது அலை வேகமாகப் பரவி வருகிறது. மனிதர்களிடையே மட்டுமே பரவி வந்த கரோனா தற்போது, விலங்குகளுக்கும் பரவுகிறது என்றத் தகவல் வெளியாகியுள்ளது.
அண்மையில், ஹைதராபாத்தில் உள்ள நேரு விலங்கியல் பூங்காவில் உள்ள 8 ஆசிய சிங்கங்களுக்குக் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட சம்பவம் வன விலங்குகள் ஆர்வலர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், மயிலாடுதுறை மாயூரநாதர் கோயிலில் கரோனா பரவலைத் தடுக்க பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. இந்த குடிநீரை கோயில் யானை அபயாம்பாளுக்கு வழங்கினார், கோயில் பாகன் வினோத். மேலும், யானைக்கு மூலிகை சாம்பிராணி புகை போட்டு எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும் முயற்சியில் ஈடுபட்டார்.
இதனையும் படிங்க: தெலங்கானாவில் 8 சிங்கங்களுக்கு கரோனா பாதிப்பு!