நாகை மாவட்டம் மயிலாடுதுறை, சீர்காழி பகுதிகளைச் சேர்ந்த சுமார் 70க்கும் மேற்பட்ட அரசு அலுவலர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலம் உள்ளிட்ட அரசு அலுவலகங்களில் பணிபுரிந்து வருகின்னர்.
இவர்கள் அனைவரும் கரோனா வைரஸ் தடுப்பு பணிகளுக்காக சிறப்பு பேருந்துகள் மூலம் தினமும் மயிலாடுதுறையில் இருந்து காரைக்கால் வழியாக நாகப்பட்டினம் செல்கின்றனர். அப்போது அவர்களை காரைக்கால் காவல் துறையினர் தினமும் பரிசோதனை செய்து அனுப்புகின்றனர்.
மேலும் சிலருக்கு உடல் சாதாரணமாக வெப்பநிலை இருந்தாலும் அவர்களை தனியாக நிற்க வைத்து மீண்டும் பரிசோதனை செய்கின்றனர். இதனால் அரசு அலுவலர்கள் நீண்ட நேரம் வரிசையில் காத்திருக்கும் நிலை ஏற்படுகிறது. எனவே தாங்கள் வசிக்கும் மயிலாடுதுறை பகுதியிலேயே கரோனா வைரஸ் தடுப்பு பணிகளை மேற்கொள்ளும்படி பணி வழங்குமாறு அரசு அலுவலர்கள் மாவட்ட நிர்வாகத்திடம் கேட்டுள்ளனர்.
இதையும் படிங்க: கரோனா வைரஸ் பாதிப்பு: முத்து நகரமான தூத்துக்குடியின் பொருளாதார நிலை?