கரோனா தொற்றானது சென்னையில் அதிகரித்துவருவதினால் ஊரடங்கு தொடர்கின்றது. இதனால் வேலைக்கு சென்றவர்கள் ஊரடங்கால் வேலையில்லாமலும், உணவிற்கு வழியில்லாமலும் சொந்த ஊருக்குத் திரும்புபவர்களின் எண்ணிக்கையானது நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. மேலும் அப்படி வருவோர் மாவட்ட எல்லையில் சோதனை செய்து கரோனா தொற்று உள்ளதா இல்லையா எனத் தெரிந்து கொள்கின்றனர்.
இந்நிலையில் நாகை மாவட்டம் சீர்காழி தாலுகாவில் சீர்காழி நகராட்சிக்குள்பட்ட கற்பகம் நகரில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த கணவர், மனைவி, மகள் என மூன்று பேருக்கும் கரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
இதேபோல கொள்ளிடம், அகனி, புதுபட்டினம், பெருந்தோட்டம், மருதங்குடி, தாண்டவன்குளம், பழையபாளையம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களிலும் பலருக்கும் கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
அதுபோல சீர்காழி வட்டாட்சியர் அலுவலக ஊழியர்கள் இருவருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. எனவே சீர்காழி தாலுகாவில் தொடர் கரோனா தொற்று பரவிவருவதால் அத்தாலுகா மக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது.
சீர்காழியில் இன்று ஒரேநாளில் 25 பேருக்கு கரோனா பாசிடிவ் என முடிவு வந்துள்ளதால் அது மேலும் மக்களிடையே பயத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: கடலூர் காவல் நிலையத்தில் இருந்த விசாரணை கைதிக்கு கரோனா!