கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக திருநள்ளாறிலுள்ள ஸ்ரீ தர்பாரண்யேசுவரர் கோயிலில் ஸ்ரீ சனீஸ்வர பகவானைத் தரிசிப்பதற்காக இருமல், காய்ச்சல் போன்ற அறிகுறியுடன் பக்தர்கள் வருவதைத் தவிர்த்துக்கொள்ளுமாறு மாவட்ட நிர்வாகம் அறிவித்திருந்தது.
ஒவ்வொரு சனிக்கிழமையும் சனீஸ்வரரை தரிசிக்க இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் மட்டும் இன்றி, வெளிநாடுகளிலிருந்தும் ஏராளமான பக்தர்கள் வருவது வழக்கம்.
அவ்வாறு வருகை தரும் பக்தர்கள் முதலில் ஆலயத்தில் உள்ள நளன் தீர்த்தக் குளத்தில் நீராடிய பின்னரே, சாமியைத் தரிசிப்பார்கள். அந்த வகையில் இன்று வருகை புரிந்த பக்தர்கள் நளன் தீர்த்தக் குளத்திற்கு நீராடச் சென்றனர். அப்போது, காவல் துறையினர் குளத்தில் நீராடத் தடை விதிக்கப்பட்டதை ஒலிப்பெருக்கி மூலம் அறிவித்தனர்.
ஆகையால், பக்தர்கள் குளத்தில் உள்ள நீரைத் தீர்த்தமாகத் தலையில் தெளித்துக்கொண்டு கோயிலுக்குச் சென்று வழிபட்டு வருகின்றனர். எப்போது ஆயிரக்கணக்கான பக்தர்கள் சூழ்ந்திருக்கும் குளமானது இன்று வெறிச்சோடி காணப்படுகிறது.
இதையும் படிங்க: கொரோனா தடுப்பு நடவடிக்கை - கர்நாடக அரசுக்கு சுதா மூர்த்தி உதவி!