சமய மாநாட்டில் பங்கேற்று திரும்பிய ஏழு பேர் நாகை மாவட்டம், மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் தனிமைப்படுத்தி கண்காணிக்கப்பட்டு வந்தனர். அவர்கள் ஏழு பேருக்கும் கரோனா தொற்று இருப்பது நேற்று உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து அவர்கள் அனைவரும் திருவாரூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சிறப்பு அவசர ஊர்தி மூலம் அனுப்பி வைக்கப்பட்டனர். இதில் மயிலாடுதுறை நகரில் ஒருவர், பாதிப்புக்குள்ளானது கண்டறியப்பட்டது.
இதைத் தொடர்ந்து அவர் வசித்த டிஎன்டி நகரைச் சுற்றி உள்ள 12 நுழைவு வாயில்களை காவல் துறையினர் உதவியோடு வருவாய்த் துறையினர், நகராட்சி அலுவலர்கள் அடைத்தனர்.
இப்பகுதி மக்களுக்குத் தேவையான பால், காய்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்கள் பாதுகாப்புடன் கொண்டு சென்று வழங்கப்பட்டு வருகிறது.
இதையும் படிங்க: கரோனா அறிகுறிகளுடன் சிகிச்சை பெற்றுவந்த மூவர் உயிரிழப்பு!