நாகை மாவட்டம் சீர்காழி அருகே உள்ள வைத்தீஸ்வரன் கோயிலில் நவக்கிரக ஸ்தலங்களில் செவ்வாய் ஸ்தலம் அமைந்துள்ளது. இக்கோயிலுக்கு பல்வேறு மாவட்டங்கள், மாநிலங்களில் இருந்தும் அதிக அளவில் பக்தர்கள் வருகை தருவார்கள்.
அவ்வாறு வரும் பக்தர்களுக்கு பேரூராட்சி நிர்வாகம் ஒலிபெருக்கி மூலம் கரோனா வைரஸ் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்ளான கோயில் வாசல், பேருந்து நிலையம், நான்கு வீதிகள் உள்ளிட்ட முக்கிய இடங்களில் பேட்டரி மூலம் இயங்கும் ஆட்டோவில் ஒலிபெருக்கி மூலம் விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.
கரோனா வைரஸ் நோய் பரவும் விதம் பற்றியும், நோய் தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும், கரோனா வைரஸ் பற்றிய பொய் வதந்திகளை நம்ப வேண்டாம் என்பது குறித்தும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
இதையும் படிங்க: உணவு பாதுகாப்புத் துறை சார்பில் கரோனா தடுப்பு விழிப்புணர்வு கூட்டம்