நாட்டை அச்சுறுத்தி வரும் கரோனாவை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் வரும் 14 ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளன. இந்த நிலையில் நாகையிலிருந்து டெல்லி இஸ்லாமிய மத மாநாட்டுக்குச் சென்று வந்த 31 பேர் கண்டறியப்பட்டு நேற்று 5 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யபட்டுள்ள நிலையில் நாகையை அடுத்த பரவை காய்கறி சந்தையில் பொருள்களை வாங்க மக்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் கூட்டம் கூட்டமாக திரண்டுள்ளனர்.
முகக் கவசம் அணியாமல், போதிய இடைவெளியின்றி சந்தையில் கூட்டமாக திரண்டு இருப்பதால் அவர்களுக்கு ஒலிபெருக்கி மூலம் அறிவிப்பு செய்யப்பட்டது.
![அலட்சியத்தில் மக்கள்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/6663865_558_6663865_1586088052804.png)
இருப்பினும் பொதுமக்கள் அதனை அலட்சியம் செய்து முண்டியடித்து பொருள்களை வாங்கி வருகின்றனர். மேலும் இப்பகுதியில் கரோனா வைரஸ் பரவுவதற்கு முன் அரசு இதற்கு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என பலரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: 'அப்போ கைத்தட்டல், இப்போ அகல் விளக்கு'- காங்கிரஸ் அதிருப்தி