நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே கிளியனூரில் உள்ள கடைகளில் பூட்டை உடைத்து தொடரும் கொள்ளை சம்பவம் பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
சம்சுதீன் என்பவரது மளிகை கடை, காசிம் என்பவரது பெட்டிகடை, ஹபீப் ரகுமான் என்பவரது டீ கடை, நஜீபுதீன் என்பவரது கடையில் ரூ. 50 ஆயிரம் மதிப்புள்ள பணம், பொருட்கள் ஆகியவற்றை கடைகளின் பூட்டை உடைத்து அடையாளம் தெரியாத ஒருவர் கொள்ளையடித்து செல்வது அருகில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.
திருடப்பட்ட கடைகளில் நான்கு முறை தொடர்ந்து திருட்டு சம்பவங்கள் நடைபெற்று உள்ளதாகவும், மூன்று முறை பெரம்பூர் காவல்நிலையத்தில் இதுகுறித்து புகார் அளிக்கப்பட்டும் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் அப்பகுதி மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
இதையும் படிங்க: லாரி பேட்டரிகள் திருட்டு: சிசிடிவி காட்சியின் மூலம் விசாரணை!