மயிலாடுதுறை: தமிழ்நாடு காங்கிரஸ் சட்டமன்ற குழு தலைவர் செல்வப்பெருந்தகை நேற்று (டிசம்பர் 27) தருமபுர ஆதீன மடத்தில், ஆதீன 27ஆவது மடாதிபதி ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகளை நேரில் சந்தித்து ஆசி பெற்றார். அவருக்கு மடத்தின் சார்பில் நினைவு பரிசுகள் வழங்கப்பட்டன.
அதன்பின் செய்தியாளர்களை சந்தித்த செல்வப்பெருந்தகை, "தருமபுர ஆதீனம் சமயப் பணிகளுடன் பல்வேறு பொதுநல பணிகளிலும் ஈடுபட்டு வருகிறது. கல்விப் பணிமட்டுமின்றி கரோனா காலத்தில் பொதுமக்கள் நலனுக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதன் மடாதிபதியை சந்தித்ததுமகிழ்ச்சி ஏற்படுத்தி உள்ளது.
பொங்கள் பரிசு தொகுப்பில் கரும்பு வழங்க முதலமைச்சருக்கு கோரிக்கை வைத்திருந்தேன். தமிழர்களின் பாரம்பரிய விழாவில் ரூ.1000 உடன் சேர்த்து பொங்கல் கரும்பு வழங்க வேண்டும். அதற்கான அடிப்படை வசதிகள் அனைத்தும் தமிழ்நாடு அரசில் உள்ளது. காலம் தாழ்த்தாமல் உடனடியாக கொள்முதல் செய்து பொங்கல் கரும்பு ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ.1,000 உடன் சேர்த்து வழங்க வேண்டும் என்பதே காங்கிரஸின் கோரிக்கையாகும்" என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: 'நான் எங்க போவேன்' - ஊருக்குள் புகுந்த காட்டு யானையை விரட்டிய வனத்துறையினர்