ETV Bharat / state

College Reunion; 36 ஆண்டுகளுக்குப் பின்னர் நண்பர்கள் நெகிழ்ச்சி சந்திப்பு! - after 36 years friends get together

மயிலாடுதுறையில் 36 ஆண்டுகளுக்கு முன்பு கல்லூரி படிப்பை முடித்த முன்னாள் மாணவர்கள் இணைந்து சந்திக்கும் நெகிழ்ச்சி விழா ஒன்று நடைபெற்றுள்ளது.

College Reunion; 36 ஆண்டுகளுக்கு பின்னர் நண்பர்கள் நெகிழ்ச்சி சந்திப்பு

author img

By

Published : Jun 20, 2022, 4:07 PM IST

மயிலாடுதுறை:மயிலாடுதுறை அருகே மன்னம்பந்தலில் உள்ள தனியார் கல்லூரியில் 1983 முதல் 1986-இல் வணிகவியல் படித்த மாணவர்கள், 36ஆண்டுகள் கழித்து சந்திக்கும் ஒரு நெகிழ்ச்சியான நிகழ்ச்சி நடைபெற்றது. நேற்று (ஜூன் 19) நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் பல பகுதிகளில் இருந்து முன்னாள் மாணவர்கள் வந்திருந்தனர்.

பல்வேறு துறைகளில் டெல்லி, மும்பை, சென்னை, கோவை எனப் பல்வேறு மாவட்டங்களிலும், பல்வேறு மாநிலங்களிலும் பணியாற்றி ஓய்வு பெறும் வயதை எட்டியுள்ள கல்லூரி முன்னாள் மாணவர்கள், தங்கள் கல்லூரி பேராசிரியர்களை அழைத்து, தங்களது பழைய சம்பவங்களை நினைவுகூர்ந்து கலந்துரையாடினர்.

இதனையடுத்து தங்கள் குடும்பத்தைப் பற்றியும், தங்கள் பணிகளைப் பற்றியும் உரையாடிய அவர்கள் தாங்கள் படித்த கல்லூரியில் தற்போது படிக்கும் ஏழை மாணவர்களுக்கு கல்விக்காக உதவி செய்ய முடிவு செய்துள்ளனர். இந்த சங்கம நிகழ்ச்சியில் ஒருவரை ஒருவர் கட்டித்தழுவி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியது, காண்போரை நெகிழ்ச்சி அடைய வைத்தது.

College Reunion; 36 ஆண்டுகளுக்குப் பின்னர் நண்பர்கள் நெகிழ்ச்சி சந்திப்பு

இதையும் படிங்க:கர்ப்பிணி பெண் காவலருக்கு சக காவலர்கள் வளைகாப்பு; பணகுடியில் நெகிழ்ச்சி சம்பவம்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.