ETV Bharat / state

படகில் சென்று தேர்தல் விழிப்புணர்வு பரப்புரை செய்த ஆட்சியர்! - Tamil Nadu Legislative Assembly Election 2021

நாகப்பட்டினம்: தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் குறித்த விழிப்புணர்வு பரப்புரையை மாவட்ட ஆட்சியர் பிரவீன் பி நாயர் படகில் சென்று செய்தார்.

விழிப்புணர்வு பிரச்சாரம்
விழிப்புணர்வு பிரச்சாரம்
author img

By

Published : Mar 4, 2021, 3:44 PM IST

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் வரும் ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், சட்டப்பேரவைத் தேர்தல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த தேர்தல் ஆணையம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது.

இந்நிலையில், நாகை மாவட்டத்தில் நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் நூறு சதவிகித வாக்குப்பதிவு அவசியத்தை வலியுறுத்தியும், தேர்தல் நேர்மையாக நடைபெற பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த பல்வேறு நிகழ்ச்சிகளும் நடைபெற்றுவருகின்றன.

அதன்படி மீனவர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சியாக நாகை துறைமுகத்திலிருந்து அக்கரைப்பேட்டை மீன்பிடி இறங்குதளம் வரையில் ஆட்சியர் பிரவீன் பி நாயர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஓம்பிரகாஷ் மீனா உள்ளிட்ட அரசு அலுவலர்கள் கடலில் படகு மூலம் பயணித்து மீனவர்களுக்குத் துண்டுப் பிரசுரங்களை வழங்கினர்.

விழிப்புணர்வுப் பரப்புரை

மேலும் துறைமுகத்தில் இருந்த மீனவர்களுக்குத் தேர்தல் குறித்து விளக்கிக் கூறியதுடன், தேர்தல் நேர்மையாகவும் 100 விழுக்காடு வாக்குப்பதிவை வலியுறுத்தி உறுதிமொழி எடுத்துக்கொள்ளப்பட்டது. இந்நிகழ்ச்சியில் அரசு அலுவலர்கள், மீன்வளக் கல்லூரி மாணவர்கள், அக்கரைப்பேட்டை, கீச்சாங்குப்பம் மீனவ பஞ்சாயத்தார் கலந்துகொண்டனர்.

இதையும் படிங்க: திமுகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை தாமதம் ஏன்?- ஈஸ்வரன் விளக்கம்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.