நாகப்பட்டினம் மாவட்டத்தில், கரோனா தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இந்த நிலையில், நாகப்பட்டினத்தில் உள்ள தனியார் கல்லூரியில் சித்தா கரோனா சிகிச்சை மையத்தை மாவட்ட ஆட்சியர் பிரவின் நாயர் நேற்று (மே 17) திறந்து வைத்தார்.
இந்த சித்தா சிகிச்சை மையத்தில் 51 படுக்கைகள், மருந்து வகைகள், ஆவி பிடிக்கும் கருவி உள்ளிட்டவைகள் இருக்கிறது. இதனை ஆட்சியர் ஆய்வு செய்தார். லேசான அறிகுறிகள் உள்ள கரோனா நோயாளிகள் சித்த மருத்துவத்தில் 7 முதல் 14 நாட்களுக்குள் குணமாகி விடுவார்கள் என்று மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.