ETV Bharat / state

நாகையில் முகக்கவசம் அணியாதவர்களிடம் அபராதம் வசூல்! - Nagapattinam Municipal Commissioner

நாகப்பட்டினம்: முகக்கவசம் அணியாதவர்களுக்கும், தகுந்த இடைவெளியைப் பின்பற்றாத நிறுவனங்களுக்கும் நகராட்சி ஆணையர் ஏகராஜ் தலைமையிலான நகராட்சி ஊழியர்கள் அபராதம் விதித்து நடவடிக்கை மேற்கொண்டனர்.

கரோனா விதி மீறல் அபராதம்  நாகப்பட்டினம் நகராட்சி ஆணையர்  நாகப்பட்டினத்தில் முகக்கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் வசூல்  முகக்கவசம் அபராதம்  Corona rule violation fine  Nagapattinam Municipal Commissioner  Collection of fines for non-wearing of face mask in Nagapattinam
Corona rule violation fine
author img

By

Published : Apr 15, 2021, 6:19 AM IST

நாகப்பட்டினம் மாவட்டத்தில் கரோனா தொற்று தீவிரமாகப் பரவிவருவதால் பொதுமக்கள் முகக்கவசம் அணிந்து, தகுந்த இடைவெளியைக் கடைப்பிடித்துச் செயல்பட வேண்டும் எனவும், விதிகளை மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மாவட்ட ஆட்சியர் பிரவீன் பி நாயர் அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

இதையடுத்து, நேற்று (ஏப். 14) நாகப்பட்டினம், நாகூர் உள்ளிட்ட பகுதிகளில் நகராட்சி ஆணையர் ஏகராஜ் தலைமையிலான நகராட்சி ஊழியர்கள் ஆய்வு நடத்தினர். அப்போது, நாகூர் புதிய பேருந்து நிலையம், கடைவீதியில் உள்ள உணவகங்கள், கடைகளில் உள்ள ஊழியர்கள், பொதுமக்கள் முகக்கவசம் அணிந்துள்ளார்களா என்பதை ஆய்வுசெய்தனர்.

இதைத் தொடர்ந்து, முகக்கவசம் அணியாத நபர்களுக்கு 200 ரூபாய் அபராதமும், தகுந்த இடைவெளியைப் பின்பற்றாத நிறுவனங்களுக்கு 500 ரூபாய் அபராதமும் விதித்து வசூலித்தனர்.

மேலும் தடைசெய்யப்பட்ட பாலித்தீன் பை பயன்படுத்தியதாகவும், கடைக்கு உரிமம் புதுப்பிக்காமல் வைத்திருந்ததாகவும் இரண்டு கடை உரிமையாளர்களுக்கு ஐந்தாயிரம் ரூபாய் அபராதமும் விதித்தனர்.

இதேபோல், அரசுப் பேருந்துகளில் பயணிகள் முகக்கவசம் அணிந்து இருக்கையில் பயணம் செய்கின்றனரா என்பதையும் நகராட்சி அலுவலர்கள் ஆய்வுசெய்தனர்.

இதையும் படிங்க: ’கரோனா விதிமீறலில் இதுவரை 10 லட்சம் அபராதம் வசூல்’ - புதுக்கோட்டை ஆட்சியர்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.