மயிலாடுதுறை அருகே மாப்படுகை கிராமம் கன்னி கோயில் தெருவில் 18 குடும்பத்தினர் தொகுப்பு வீடுகளில் வசித்து வருகின்றனர். சுமார் 50 வருடங்களுக்கு முன்பு கட்டப்பட்ட இந்தத் தொகுப்பு வீடுகள் தற்போது, சிதிலமடைந்து இடிந்து விழும் அபாய நிலையில் உள்ளன. மேலும் மேற்கூரையின் காரைகள் பெயர்ந்து விழுந்து வருகிறது.
இதனால் தொகுப்பு வீடுகளில் குடியிருப்பவர்கள் தினந்தோறும் அச்சத்துடனேயே வாழ்ந்து வருகின்றனர். மேற்கூரை பெயர்ந்து உள்ளதால் மழை காலங்களில் பெரும் அவதி அடைந்து வருகின்றனர். கரையை கடந்த நிவர் புயல் காரணமாக பெய்த மழையில் மேற்கூரையில் இருந்து மழைநீர் வீட்டுக்குள் வருவதை தடுப்பதற்காக மேற்கூரையில் தார்ப்பாய் விரித்து வைத்துள்ளனர்.
இந்நிலையில் மீண்டும் ஒரு காற்றழுத்த தாழ்வு நிலை ஏற்பட்டுள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ள நிலையில், அங்கு வசிக்கும் 18 குடும்பத்தினரும் தங்குவதற்கு தங்கள் பகுதியில் சிறப்பு முகாம் அமைத்து தர வேண்டும் என்றும், உடனடியாக போர்க்கால அடிப்படையில் தொகுப்பு வீடுகளை அரசு புதுப்பித்து தரவேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: பொள்ளாச்சியில் குடிநீர் கேட்டு சாலை மறியல்