நாகை மாவட்டம் மயிலாடுதுறை அரசு பெரியார் மருத்துவமனையில் தூய்மைப்பணி, பாதுகாப்பு பணி உள்ளிட்ட பணிகளை செய்யும் ஐந்து தொழிலாளர்களை அந்நிறுவனம் அண்மையில் பணியிலிருந்து நீக்கியது.
அவர்களை மீண்டும் பணியில் சேர்க்க வலியுறுத்தி சிஐடியு அமைப்பினர் உண்ணாவிரதப்போராட்டம் நடத்துவதாக அறிவித்தனர்.
இந்நிலையில் மயிலாடுதுறை கோட்டாட்சியர் அலுவலகத்தில் வட்டாட்சியர் முருகானந்தம் தலைமையில் அமைதிப் பேச்சுவார்த்தைக் கூட்டம் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் பணி நீக்கம் செய்யப்பட்ட தொழிலாளர்களுக்கு மீண்டும் 17 ஆம் தேதி பணி வழங்கக் கோரி வட்டாட்சியர் உத்தரவிட்டிருந்தார்.
இதையடுத்து நேற்று (18.07.20) பணியில் சேர வந்த தொழிலாளர்களுக்கு தனியார் ஒப்பந்த நிர்வாகம் அனுமதி மறுத்தது. இதைக்கண்டித்து, சிஐடியு அமைப்பினர் மாவட்ட துணை செயலாளர் துரைக்கண்ணு தலைமையில் மருத்துவமனை முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
பின்னர் மயிலாடுதுறை- கும்பகோணம் பிரதான சாலையில் அமர்ந்து திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.அவர்களிடம் மயிலாடுதுறை டிஎஸ்பி அண்ணாதுரை பேச்சுவார்த்தை நடத்தினார். அதன் பின்னரே போராட்டமானது தற்காலிகமாக விலக்கிக்கொள்ளப்பட்டது.
இதையும் படிங்க: கறுப்பர் கூட்டம் வங்கிக் கணக்குகளை முடக்க திட்டம்!