ETV Bharat / state

காரைக்காலில் காலரா பரவல் எதிரொலி: மயிலாடுதுறையில் சுகாதாரத்துறையினர் ஆய்வு!

காரைக்கால் பகுதியில் காலரா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்துவரும் நிலையில், மயிலாடுதுறை மாவட்ட எல்லைப்புற கிராமங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து மாநில பொது சுகாதாரத்துறை இயக்குனர் ஆய்வு மேற்கொண்டார்.

காரைக்காலில் காலரா பரவல் எதிரொலி: மயிலாடுதுறையில் சுகாதாரத்துறையினர் ஆய்வு!
காரைக்காலில் காலரா பரவல் எதிரொலி: மயிலாடுதுறையில் சுகாதாரத்துறையினர் ஆய்வு!
author img

By

Published : Jul 5, 2022, 5:37 PM IST

நாகை: காரைக்காலில் கடந்த சில நாட்களாக காலரா நோய் பரவல் அதிகரித்து வருகிறது. இதனையடுத்து தமிழ்நாடு சுகாதாரத்துறை அமைச்சர் மற்றும் துறைச்செயலாளர் ஆகியோரின் அறிவுறுத்தலின்படி, மாநில பொது சுகாதாரம் நோய் தடுப்பு மருந்து துறை இயக்குநர் டாக்டர் செல்வவிநாயகம், காரைக்கால் பகுதியைச் சுற்றியுள்ள தமிழ்நாட்டு எல்லையோர கிராமங்களில் நோய் பரவல் உள்ளதா என்பது குறித்து ஆய்வு மேற்கொண்டார்.

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா திருக்கடையூரில், தரைமட்ட நீர்த்தேக்க தொட்டியிலிருந்து பொதுமக்களுக்கு விநியோகிக்கும் தண்ணீரில் போதிய குளோரின் கலக்கப்படுகிறதா, சுகாதாரமான முறையில் விநியோகிக்கப்படுகிறதா என்பது குறித்து ஆய்வு செய்தார்.

தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த டாக்டர் செல்வவிநாயகம், “காரைக்காலில் காலரா பரவி வருவதால் அப்பகுதியை சுற்றியுள்ள நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருவாரூர் ஆகிய தமிழ்நாட்டு எல்லைகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து அமைச்சர் மற்றும் துணைச்செயலாளர் அறிவுரைப்படி ஆய்வு மேற்கொண்டு வருகிறேன்.

காரைக்காலில் காலரா பரவல் எதிரொலி: மயிலாடுதுறையில் சுகாதாரத்துறையினர் ஆய்வு!

எல்லையோரம் உள்ள அரசு மருத்துவமனைகள் மற்றும் நீரேற்று நிலையங்களிலும் ஆய்வு செய்துள்ளேன். மேலும் மருந்து இருப்பு குறித்தும், வார்டு வசதிகள் குறித்தும் ஆய்வு செய்தேன். இதுகுறித்த முழு அறிக்கை அமைச்சரிடம் சமர்பிக்கப்படும். மாவட்ட சுகாதாரத்துறை அலுவலர்களுக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுப்பது குறித்த அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

போதிய மருந்து கையிருப்பும், வார்டு வசதிகளும் உள்ளன. காரைக்காலில் பணிபுரிபவர்கள் தமிழ்நாட்டு பகுதியில் இருந்தால், அவர்களுக்கு அறிகுறிகள் உள்ளதா என்பது குறித்தும் சோதனைகள் மேற்கொண்டுள்ளோம். நடமாடும் மருத்துவக்குழு மூலம் பொதுமக்களுக்குத் தேவையான விழிப்புணர்வு மற்றும் பரிசோதனை செய்ய அறிவுறுத்தியுள்ளோம்.

மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள எட்டு பிளாக்குகளிலும் மருத்துவக்குழுவினர் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். எல்லையோர கிராமங்களில் வீடு வீடாக சென்று சோதனை செய்து, தேவையிருப்பின் மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளிப்பதற்கான அனைத்து முன்னேற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது” என தெரிவித்தார்.

இந்த ஆய்வின்போது சுகாதாரத்துறை துணை இயக்குனர் டாக்டர் குமரகுருபரன், வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் கார்த்திக் சந்திரகுமார், மேற்பார்வையாளர் வெங்கடேசன் உள்ளிட்ட அலுவலர்கள் உடன் இருந்தனர்.

இதையும் படிங்க: சென்னையில் முகக் கவசம் அணியாவிட்டால் 500 ரூபாய் அபராதம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.