ETV Bharat / state

மூவர்ணங்களை முகத்தில் வரைந்து சி.ஏ.ஏ.வுக்கு எதிராக சிறுவர்கள் போராட்டம்

author img

By

Published : Feb 3, 2020, 8:43 AM IST

நாகப்பட்டினம் : குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக சீர்காழி அருகே மூன்று ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சிஏஏ போராட்டம், CAA protest
சிஏஏ போராட்டம்

நாகை மாவட்டம் சீர்காழி அருகே திருமுல்லைவாசல் கிராமத்தில் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து அனைத்து ஜமாத்தினர், திமுகவினர் பேரணியாகச் சென்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தாழந்தொண்டியில் தொடங்கிய பேரணி திருமுல்லைவாசல் கடைத்தெரு வரை சுமார் மூன்று கி.மீ. தொலைவுக்கு நடைபெற்றது.

மூன்று ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்ற பேரணியில், கையில் தேசியக்கொடியை ஏந்தியும் சிறுவர்கள் முகத்தில் தேசிய வண்ணங்களை வரைந்தும் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பிச்சென்றனர். தொடர்ந்து பேரணியாகச் சென்றவர்கள் திருமுல்லைவாசல் கடைத்தெருவில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

குடியுரிமை சட்டத்துக்கு எதிராக சீர்காழி அருகே நடந்த போராட்டம்

அப்போது குடியுரிமை திருத்தச் சட்டத்தால் இஸ்லாமியர்களுக்கு பாதிப்பு ஏற்படும் எனவும் அந்தத் திருத்தச் சட்டத்தை உடனே மத்திய அரசு ரத்துசெய்ய வேண்டும் எனவும் கோஷங்கள் எழுப்பினர்.

இதையடிங்க : மத ரீதியிலாக மக்களைப் பிரிக்கத்தான் இந்த யுக்தி! - பாஜக மீது அம்பு தொடுக்கும் முதலமைச்சர்!

Intro:குடியுரிமை சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அனைத்து ஜமாத்தினர் மற்றும் திமுகவினர் பேரணியாக சென்று ஆர்ப்பாட்டம். 3000க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு:-
Body:நாகை மாவட்டம் சீர்காழி அருகே திருமுல்லைவாசல் கிராமத்தில் குடியுரிமை சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அனைத்து ஜமாத்தினர் மற்றும் திமுகவினர் பேரணியாக சென்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தாழந்தொண்டியில் தொடங்கிய பேரணி திருமுல்லைவாசல் கடைத்தெரு வரை சுமார் 3கிலோ மீட்டர் தொலைவிற்கு நடைபெற்றது .3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்ற பேரணியில் கையில் தேசியக் கொடியை ஏந்தியும் சிறுவர்கள் முகத்தில் தேசிய வண்ணங்களை வரைந்தும் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக கோஷங்கள் எழுப்பி சென்றனர். தொடர்ந்து பேரணியாகச் சென்றவர்கள் திருமுல்லைவாசல் கடைத்தெருவில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது குடியுரிமை திருத்தச்சட்டத்தால் இஸ்லாமியர்களுக்கு பாதிப்பு ஏற்படும் எனவும் அந்த திருத்தச்சட்டத்தை உடனே மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும் எனவும் கோஷங்கள் எழுப்பினர்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.