நாகப்பட்டினம், அன்னை சத்யா அரசு குழந்தைகள் காப்பகத்தில் தாய், தந்தை இல்லாத குழந்தைகள், பெற்றோர்களில் ஆதரவற்ற குழந்தைகள் இக்காப்பத்தில் தங்கி கல்வி பயின்றுவருகின்றனர்.
இங்கு பயில இந்த ஆண்டுக்கான சேர்க்கை தற்போது நடைபெற்றுவருகிறது, மாணவி எனில் ஒன்று முதல் 12ஆம் வகுப்பு வரையிலும், மாணவன் எனில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரையிலும் இக்காப்பகத்தில் தங்கி கல்வி பயிலலாம்.
அதற்கான விண்ணப்பங்களை அரசு குழந்தைகள் காப்பகம், சாமந்தான்பேட்டை, பால்பண்ணைச்சேரி, நாகப்பட்டினம் என்ற முகவரியில் தொடர்பு கொண்டு விண்ணப்பங்களை பெற்றுக் கொள்ளலாம்.
பூர்த்தி செய்த விண்ணப்பத்துடன் வட்டாட்சியரிடமிருந்து பெற்ற ஆண்டு குடும்ப வருமான (ரூ.24000/-க்குள் இருக்கும் சான்றுகளுடன், ஜூலை 31ஆம் தேதி வரை விண்ணப்பங்கள் அளிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.