நாகை மாவட்டம் சீர்காழி அருகே பழைய மீனவ கிராமத்தைச் சேர்ந்தவர் ரமேஷ். இவரது மூன்று வயது மகள் ஹரிணி அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் எல்கேஜி படித்துவந்தார். சிறுமிக்கு ஏற்பட்ட மர்ம காய்ச்சலால் இரண்டு நாள்களாக சீர்காழி அரசு தலைமை மருத்துவமனையில் காய்ச்சல் பிரிவில் சேர்க்கப்பட்டிருந்தார். ஆனால் சிறுமி சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.
இது குறித்து சிறுமியின் உறவினர்கள் கூறுகையில், ஹரிணியை மருத்துவமனையில் அனுமதித்திருந்த இரண்டு நாள்களாக குழந்தை மருத்துவர் சிகிச்சை அளிக்க வரவில்லை. செவிலி மட்டுமே சிகிச்சை அளித்ததால் ஹரிணி மருத்துவமனையிலேயே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.
மேலும், உயிரிழந்த குழந்தையை வீட்டிற்கு எடுத்துச் செல்ல மருத்துவமனையில் அமரர் வாகனம்கூட இல்லை என வருத்தம் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: செங்கல்பட்டு ரயில் நிலையத்தில் துணிப்பையில் கிடந்த குழந்தை!