அயோத்தியில் ராமர் கோயில் கட்டுமானப் பணிக்கான பூமி பூஜை ஆகஸ்ட் 5ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதற்காக தமிழ்நாட்டின் பல்வேறு புனித தலங்களிலிருந்து புனிதநீர், புனித மண், பிரசாதம், பூஜைப் பொருள்கள் ஆகியவை அனுப்பப்பட்டு வருகின்றன.
அந்த வகையில், விஸ்வ ஹிந்து பரிஷத் சார்பில் நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் காவிரி துலாக்கட்டத்தில் உள்ள ரிஷப தீர்த்தத்தில் இருந்து காவிரி நீர், மண் எடுத்து அயோத்தி ராமர் கோயில் கட்டுமானப் பணிக்கு அனுப்பப்பட்டன.