ETV Bharat / state

வாடகை தராமல் இழுத்தடிக்கும் அரசு: தற்கொலைக்கு முயன்ற கார் ஓட்டுநர் - கஜா புயல்

நாகப்பட்டினம்: கஜா புயலின் மீட்பு பணிகளுக்காக நியமிக்கப்பட்ட சிறப்பு அலுவலர் பயன்படுத்திய வாகனத்திற்கு, வாடகை பணம் வழங்காததால் மனமுடைந்த கார் ஓட்டுநர், தீ குளித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

கார் ஓட்டுநர்
கார் ஓட்டுநர்
author img

By

Published : Jul 1, 2020, 5:31 AM IST

நாகப்பட்டினம் உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் 2018ஆம் ஆண்டு கஜா புயல் கோர தாண்டவம் ஆடியது. இதற்கான மீட்புப் பணிகளின்போது, அரசு அலுவலர்கள் பயன்படுத்திய வாடகை கார்களுக்கு இன்னும் வாடகை பணத்தை அரசு தரவில்லை என ஓட்டுநர்கள் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.

கஜா புயலினால் நாகப்பட்டினம் மாவட்டம் அதிகளவில் பாதிப்பைச் சந்தித்தது. அப்போது, பல அமைச்சர்களும், ஆட்சியர்களும் நாகை மாவட்டத்தில் முகாமிட்டு மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர். அப்போது, அரசு அலுவலர்களின் பயன்பாட்டிற்கு நாகப்பட்டினம் வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் மூலம் வாகனங்கள் ஏற்பாடு செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், நாகப்பட்டினத்தைச் சேர்ந்த பாலாஜி என்பவர், “கஜா புயல் மீட்பு பணிகளுக்காக தனது சொகுசுகாரை 70 நாள்களுக்கு அரசு அலுவலர்கள் வாடகைக்கு எடுத்தனர். அதற்கான வாடகை பணமான மூன்று லட்சம் ரூபாயை இரண்டு ஆண்டுகளாகத் தராமல், டீசலுக்கான செலவு ரூபாய் 93 ஆயிரம் மட்டும் கொடுத்துவிட்டு மீதம் இரண்டு லட்சத்து ஏழாயிரம் ரூபாய் தொகையை தராமல் அலைக்கழிக்கின்னர்.

இதுகுறித்து முன்னாள் நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் சுரேஷ்குமார், தற்போதைய ஆட்சியர் பிரவீன் பி நாயர், வட்டாரப் போக்குவரத்து அலுவலர்கள் உள்ளிட்டவர்களைச் சந்தித்து பலமுறை மனு அளித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்படவில்லை” என்று குற்றஞ்சாட்டியுள்ளார்.

அதுமட்டுமல்லாது, வாடகை பணம் வரவில்லை எனில் தான் தற்கொலை செய்து கொள்ளப்போவதாகவும் அவர் மனு அளித்துள்ளார். அந்த மனுவுக்கும் எந்த பதிலும் வராததால், மனமுடைந்த பாலாஜி, நாகப்பட்டினம் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் தீக்குளிக்க முயற்சித்தார். அப்போது அருகிலிருந்த பொதுமக்கள் அவரைத் தடுத்து நிறுத்தி அங்கிருந்து அழைத்துச் சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.