மத்திய அரசு கொண்டுவந்துள்ள குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடுக்கு எதிராக பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடைப்பெற்றுவருகின்றன. இந்நிலையில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக நாகப்பட்டினத்தில் உள்ள புகழ்பெற்ற நாகூர் தர்கா முன்பு, சவப்பெட்டியை வைத்து இஸ்லாமியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகத்தினர், பல இஸ்லாமியர்கள் கலந்துகொண்ட இந்தப் போராட்டத்தில், நாகூர் தர்காவின் அலங்கார வாசலில் சவப்பெட்டியை வைத்து, மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக கோஷங்களை எழுப்பியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையும் படிக்க்: குடியுரிமை திருத்தச் சட்டம் - இஸ்லாமியர்கள் வாயில் கருப்பு துணி கட்டி போராட்டம்