மயிலாடுதுறை செட்டித் தெருவைச் சேர்ந்தவர் ஷாஜகான். தேசிய மேல்நிலைப் பள்ளியில் பட்டதாரி ஆசிரியராகப் பணியாற்றி வரும் இவரது மகன் முகம்மதுபாசில் (23) சி.ஏ பயிற்சி பெற்று வருகிறார். இவர் கும்பகோணத்தில் நடைபெற்ற தேர்வில் கலந்து கொள்வதற்காக இன்று (ஜன.24) மயிலாடுதுறை- கல்லணை செல்லும் சாலையில் இருசக்கர வாகனத்தில் பயணித்திருக்கிறார்
அப்போது மயிலாடுதுறையை அடுத்த கோழிகுத்தி என்ற இடத்தில் முகம்மதுபாசிலின் வாகனத்தின் மீது மாருதி சொகுசு கார் நேருக்கு நேர் மோதியது. இதில் முகம்மது பாசில் தூக்கி வீசப்பட்டார். உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த பாசிலை அருகில் இருந்தவர்கள் உடனடியாக மீட்டு மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் பாசில் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து குத்தாலம் காவல் துறையினர் வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க:சிசிடிவி: போலீசை பார்த்து தெறித்து ஓடிய திருடர்கள்... ரத்தம் சொட்டிய நிலையிலும் துரத்திப் பிடித்த காவலர்!