மயிலாடுதுறை கேணிக்கரை சுப்பிரமணியபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ஜெயராஜ். கடந்த மார்ச் மாதம் 23ம் தேதி, நள்ளிரவு இவரது வீட்டு வாசலில் நிறுத்தியிருந்த புல்லட் திருடு போயுள்ளது.
இதேபோல், அடுத்த இரண்டு நாள்களில், அதே பகுதியைச் சேர்ந்த மயிலாடுதுறை தீயணைப்புத் துறை அலுவலர் முத்துக்குமார் என்பவரின் வீட்டு வளாகத்தில் நிறுத்தப்பட்டு இருந்த புல்லட்டும் திருடு போனது. இச்சம்பவம் குறித்து காவல் நிலையததில் புகார் அளிக்கப்பட்டது.
இப்புகாரின் அடிப்படையில், மயிலாடுதுறை குற்றப்பிரிவு காவல் துறையினர் சிசிடிவி காட்சிகளைக் கொண்டு தீவிர விசாரணை செய்து வந்தனர். விசாரணையில், நல்லத்துத்குடி பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் என்பவர் இந்தச் செயலில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது.
முன்னதாக நேற்று முன் தினம் (ஜூன்.18) மயிலாடுதுறை கிளைச்சிறை முன்பு காவல் துறையினர் வாகன சோதனையில் ஈடுப்பட்டிருந்தபோது, சந்தேகத்திற்கு இடமாக இருசக்கர வாகனத்தில் வந்த நபரை பிடித்த விசாரணை செய்தனர். அப்போது புல்லட்டை திருடிய மணிகண்டன் தான் அந்நபர் எனத் தெரிய வந்ததையடுத்து, உடனடியாக, காவல் துறையினர் மணிகண்டனை கைது செய்தனர்.
மேலும், திருடப்பட்ட புல்லட்கள் ஜெயங்கொண்டத்தை அடுத்த மீன்சுருட்டியில் விற்பனை செய்தது தெரிய வந்தது. அதனைத் தொடர்ந்து உடனடியாக காவல் துறையினர் இரண்டு புல்லட்டுகளையும் பறிமுதல் செய்தனர். மேலும், வழக்குப்பதிவு செய்து மணிகண்டனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். ஏற்கனவே, மணிகண்டன் மீது பல்வேறு திருட்டு வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: காதலியின் அண்ணனைக் கடத்தி கொலை மிரட்டல் விடுத்த காதலன் உள்பட 3 பேர் கைது!