மயிலாடுதுறை: குத்தாலம் அருகே லாரி தங்கமணியின் மகன் வைத்தியநாத சுவாமி (40) லாரி ஓட்டுநராக இருந்தார். இவருக்குத் திருமணமாகி ஒரு குழந்தை இருக்கும் நிலையில் மனைவியைப் பிரிந்து தாயுடன் வசித்துவருகிறார்.
இவரது வீட்டிற்கு அருகில் வசிக்கும் சித்தப்பா மூர்த்தியின் மகன்களான திவாகர் (32), தினேஷ் (34) ஆகியோருடன் வைத்தியநாத சுவாமிக்கு இடப்பிரச்சினை இருந்துவந்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் இன்று (நவம்பர் 27) மூவலூர் கடைவீதியில் நின்றுகொண்டிருந்த திவாகர், தினேஷ் ஆகியோரிடம் வைத்தியநாத சுவாமி மதுபோதையில் தகராறில் ஈடுபட்டுள்ளார். அப்போது இருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டுக் கைகலப்பாக மாறியுள்ளது.
இதனால் ஆத்திரமடைந்த திவாகர், தினேஷ் அருகிலிருந்த இரும்புக் கம்பியால் அவரது தலையில் பலமாக அடித்துள்ளனர். இதில் நிலைகுலைந்துபோன வைத்தியநாத சுவாமியை அருகிலிருந்த அரசு மருத்துவமனைக்குச் சிகிச்சைக்குச் சென்று அனுமதித்தனர்.
அவரைப் பரிசோதனை செய்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர். இச்சம்பவம் குறித்துத் தகவலறிந்து வந்த குத்தாலம் காவல் துறையினர் திவாகர், தினேஷை கைதுசெய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
இதையும் படிங்க: நடுரோட்டில் மதுபோதையில் காவலர்களை தாக்கிய மாணவர்கள்!