ETV Bharat / state

அரசு மருத்துவமனையில் அமரர் ஊர்தி இல்லை - இறுதி ஊர்வலம் சென்ற உடல்? - body found dead in pond in nagappattinam

நாகப்பட்டினம்: அரசு தலைமை மருத்துவமனையில் அமரர் ஊர்தி இல்லாததால், குளத்தில் விழுந்து பலியான இளைஞரின் உடலை உடற்கூறாய்விற்காக இறுதி ஊர்வலம் செல்லும் வாகனத்தில் ஏற்றிச் சென்ற அவலம் நிகழ்ந்துள்ளது.

குளத்தில் விழுந்து இறந்த அடையாளம் தெரியாத நபர்
body found dead in pond in nagappattinam
author img

By

Published : Dec 9, 2019, 5:23 PM IST

நாகப்பட்டினம் மாவட்டம், மஞ்சக்கொல்லை ஊராட்சியிலுள்ள குமரன் கோயிலுக்குச் சொந்தமான குளத்தில் அடையாளம் தெரியாத இளைஞரின் உடல் மிதந்துள்ளது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் நாகை நகர காவல் துறையினருக்கும், தீயணைப்புத் துறையினருக்கும் தகவல் கொடுத்ததின் பேரில் தீயணைப்புப் படை வீரர்கள், அந்நிலைய அலுவலர் அன்பழகன் தலைமையில் கோயில் குளத்தில் இறங்கி, கயிறு மூலம் இளைஞரின் உடலைக் கரைக்கு இழுத்து வந்தனர்.

அப்போது இறந்தவரின் உடலை உடற்கூறாய்விற்காக அரசு தலைமை மருத்துவமனைக்கு எடுத்துச் செல்ல, நகர காவல் துறையினர் தொலைபேசி மூலம் மருத்துவமனை நிர்வாகத்திடம் அமரர் ஊர்தி கேட்டுள்ளனர். அதற்கு அவர்கள் அமரர் ஊர்தி இல்லையென தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.

குளத்தில் விழுந்து இறந்த அடையாளம் தெரியாத நபர்

அனைவரும் கட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டிய 'பூஜ்ய முதல் தகவல் அறிக்கை!

இதனால் செய்வது அறியாமல் திகைத்த நகரக் காவல் துறையினர் உடனடியாக இறுதி ஊர்வலம் செல்லும் வாகனத்தில், இளைஞரின் உடலை ஏற்றி, திறந்தவெளியில் துர்நாற்றம் வீச, நோய் பரவும் விதமாக உடற்கூறாய்விற்காக அனுப்பி வைத்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Intro:குளத்தில் விழுந்து வாலிபர் பலி, நாகப்பட்டினம் அரசு தலைமை மருத்துவமனையில் அமரர் ஊர்தி இல்லாததால் உடற்கூறு ஆய்விற்காக இறுதி ஊர்வலம் செல்லும் வாகனத்தில் நோய் பரவும் விதமாக ஏற்றிச் சென்ற அவலம்.Body:குளத்தில் விழுந்து வாலிபர் பலி, நாகப்பட்டினம் அரசு தலைமை மருத்துவமனையில் அமரர் ஊர்தி இல்லாததால் உடற்கூறு ஆய்விற்காக இறுதி ஊர்வலம் செல்லும் வாகனத்தில் நோய் பரவும் விதமாக ஏற்றிச் சென்ற அவலம்.

நாகப்பட்டினம் மாவட்டம், மஞ்சக்கொல்லை ஊராட்சியில் உள்ள குமரன் கோவிலுக்குச் சொந்தமான குளத்தில் அடையாளம் தெரியாத வாலிபர் உடல் மிகுந்துள்ளது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் நாகை நகர காவல் துறையினருக்கும், தீயணைப்பு துறையினருக்கும் தகவல் கொடுத்ததின் பேரில் தீயணைப்பு படை வீரர்கள் நிலைய அலுவலர் அன்பழகன் தலைமையில் கோவில் குளத்தில் இறங்கி கயிறு மூலம் வாலிபரின் உடலை கரைக்கு இழத்து வந்தனர். அப்போது இறந்தவரின் உடலை உடற்கூறு ஆய்விற்காக நாகப்பட்டினம் அரசு தலைமை மருத்துவமனைக்கு எடுத்துச் செல்வதற்காக நாகை நகர காவல் துறையினர் தொலைபேசி மூலம் மருத்துவமனை நிர்வாகத்திடம் அமரர் ஊர்தி கேட்டுள்ளனர் அதற்கு அவர்கள் அமரர் ஊர்தி இல்லையென தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் செய்வது அறியாமல் திகைத்த நாகை நகர காவல் துறையினர் உடனடியாக இறுதி யாத்திரை செல்லும் வாகனத்தில் வாலிபரின் உடலை ஏற்றி திறந்தவெளியில் துர்நாற்றம் வீச நோய் பரவும் விதமாக உடற்கூறு ஆய்விற்காக அனுப்பி வைத்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது.Conclusion:

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.