ETV Bharat / state

நாகையில் தடை செய்யப்பட்ட பகுதிகளின் தடுப்புகள் அகற்றம்! - நாகப்பட்டினத்தில் நாகையில் தடை செய்யப்பட்ட பகுதிகளின் தடுப்புகள் அகற்றம்

நாகப்பட்டினம்: கரோனா பாதிப்பு குறைந்து வருவதையடுத்து தடை செய்யப்பட்ட பல்வேறு பகுதிகளின் தடுப்புகள் அகற்றும் பணிகள் தீவிரமாக நடைபெற்றுவருகின்றன.

தடை செய்யப்பட்ட பகுதிகளின் தடுப்புகள் அகற்றம்

author img

By

Published : May 12, 2020, 4:01 PM IST

நாகப்பட்டினம் மாவட்டத்தில் 45 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டதையடுத்து 44 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். இந்நிலையில், புட்டபர்த்தி சென்று திரும்பிய ஒருவர் மட்டும் தொடர்ந்து சிக்சை பெற்றுவருகிறார்.

இந்த நிலையில் நாகை மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட பகுதிகளின் தடுப்புகள் அகற்றப்பட்டுவருகிறது. அதன்படி நாகை நகராட்சிக்கு உள்பட்ட நாகூரில் தடை செய்யப்பட்ட 20க்கும் மேற்பட்ட பகுதிகள் தகரம் கொண்டு மக்கள் வெளியே செல்லாத வகையில் முற்றிலும் அடைக்கப்பட்டிருந்தது.

இந்தச் சூழலில் ஒரு மாத காலத்திற்குப் பிறகு பண்டகசாலை தெரு, தர்ஹா குளம், பங்களா தோட்டம், தலைமாட்டுதெரு உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட பகுதிகளில் உள்ள தடுப்புகள் அகற்றப்பட்டன.

கடந்த ஒரு மாத காலத்திற்குப் பிறகு நாகையில் கரோனா கட்டுக்குள் கொண்டுவரப்பட்டு தடுப்புகள் அகற்றப்பட்டதைத் தொடர்ந்து பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

இதையும் படிங்க: ஈடிவி பாரத் செய்தி எதிரொலி: குன்னூர் பேருந்து நிலையப் பகுதியில் பணிகள் தொடக்கம்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.