ETV Bharat / state

பாஜக பெண் வேட்பாளரின் மண்டை உடைப்பு: நிலக்கோட்டையில் பரபரப்பு - திண்டுக்கல் நகர்புற உள்ளாட்சித் தேர்தல்

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் பேரூராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்குப் போட்டியிடும் பாஜக பெண் வேட்பாளர் மீது நிகழ்த்தப்பட்ட தாக்குதலால் அவரது தலையில் காயம் ஏற்பட்டது. இதனால் நிலக்கோட்டை அருகே பரபரப்பு ஏற்பட்டது.

பேரூராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும் பாஜக-பெண் வேட்பாளர் கல்லடியால் தாக்கப்பட்டார்

author img

By

Published : Feb 9, 2022, 9:25 AM IST

திண்டுக்கல்: நிலக்கோட்டை தாலுகா அம்மையநாயக்கனூர் பேரூராட்சியில் 6ஆவது வார்டு பதவிக்குப் போட்டியிடும் பாஜக பெண் வேட்பாளர் ராணி நேற்று முன்தினம் இரவு ஒருத்தட்டு, பொம்மனம்பட்டி ஆகிய பகுதிகளில் முதல் நாள் தேர்தல் பரப்புரையை முடித்துவிட்டு காரில் வீடு திரும்பிக்கொண்டிருந்தார்.

அப்போது வழியில் இடைமறித்த அமமுக வேட்பாளர் சன்மதியின் கணவர் ரவுடி பிரபாகரன், ரித்தீஷ் குமார் ஆகியோர் காரின் மீது சராமாரியாக கற்களை விட்டு எரிந்ததில் முன்பக்க கண்ணாடி சேதமடைந்து ராணியின் தலையில் பட்டு பலத்த காயம் ஏற்பட்டது.

இதனையடுத்து உடனடியாக அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்ட ராணிக்கு முதலுதவி அளிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. இது குறித்து செய்தி அப்பகுதியில் பரவியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த அம்மையநாயக்கனூர் காவல் ஆய்வாளர் சண்முகலட்சுமி, காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகளை வலைவீசித் தேடிவருகின்றனர்.

இதையும் படிங்க:மகன் இறப்பில் சந்தேகம்: மருமகளைக் கைது செய்யக்கோரி போராடிய தந்தை

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.