ETV Bharat / state

'வைகோ ஒரு தேசத்துரோகி..!' - எஸ்.ஆர்.சேகர் குற்றச்சாட்டு

நாகை: "தேசத்திற்கு எதிராக பேசிய வைகோ ராஜ்யசபா எம்பியாக ஆசைப்படுவதற்கு, நாட்டின் சட்டங்கள் இடமளிக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்" என்று, பாஜக மாநில பொருளாளர் எஸ்.ஆர்.சேகர் தெரிவித்துள்ளார்.

எஸ்.ஆர்.சேகர்
author img

By

Published : Jul 8, 2019, 7:24 PM IST

நாகை மாவட்டம், திருக்கடையூரில் உள்ள புகழ்பெற்ற அபிராமி அம்மன் உடனுறை அமிர்தகடேஸ்வரர் ஆலயத்தில் பாஜக மாநில பொருளாளரும், செய்தி தொடர்பாளருமான எஸ்.ஆர்.சேகர் சாமி தரிசனம் செய்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "மத்திய பட்ஜெட் அனைத்து தரப்பு மக்களுக்கும் பயன் அளிக்கும் உன்னதமான பட்ஜெட். மகளிர் சுய உதவிக்குழு பெண்கள் வட்டியில்லாத கடன் பெற திட்டம் வகுக்கப் பட்டுள்ளது. தேசத்திற்கு எதிராக பேசி தண்டனைப் பெற்ற வைகோ, ராஜ்யசபா எம்பியாக ஆவதற்கு ஆசைப்படுகிறார். இந்த நாட்டின் சட்டங்கள், தேசத் துரோகியின் வேட்புமனுவை அங்கீகரிக்குமா என்று பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்" எனக் கேள்வி எழுப்பினார்.

-எஸ்.ஆர்.சேகர்

Intro:தேசத்திற்கு எதிராக பேசிய வைகோ ராஜ்யசபா எம்பியாக ஆசைப்படுவதற்கு இந்த நாட்டின் சட்டங்கள் இடமளிக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும் திருக்கடையூரில் பாஜக மாநில பொருளாளரும், செய்தி தொடர்பாளருமான சேகர் பேட்டி:-

Body:நாகை மாவட்டம் திருக்கடையூரில் உள்ள புகழ்பெற்ற அபிராமி அம்மன் உடனுறை அமிர்தகடேஸ்வரர் ஆலயத்தில் சாமி தரிசனம் செய்ய வந்த பாஜக மாநில பொருளாளரும், செய்தி தொடர்பாளருமான எஸ்.ஆர்.சேகர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில்;
தற்போதைய மத்திய பட்ஜெட் ஆனது அனைத்து தரப்பு மக்களுக்கும் பயன் அளிக்கும் உன்னதமான பட்ஜெட் என்றார். மகளிர் சுய உதவிக்குழு பெண்கள் வட்டியில்லாத கடன் பெற திட்டம் வகுக்கப் பட்டுள்ளது என்றார். மேலும் இந்த பகுதி மக்களின் நீண்ட ஆண்டுகள் கோரிக்கையான தரங்கம்பாடி முதல் மயிலாடுதுறை வரையிலான ரயில் சேவையை துவங்க பகுதி முக்கிய நபர்கள் உடன் சென்று மத்திய ரயில்வே அமைச்சரை சந்தித்து வலியுறுத்தி பெற்றுத் தருவேன் என்ற தெரிவித்தார். பிரச்சினையில் தமிழக அரசும், காவல் துறையும் காலதாமதம் ஏற்படுத்தியது மெத்தனப்போக்கை காட்டுவதற்காக குற்றம்சாட்டினார். மதிமுக பொதுச் செயலாளர் வைகோ ராஜ்யசபா உறுப்பினர் பதவிக்கு வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார். தேசத்திற்கு எதிராக பேசிய வைகோ ராஜ்யசபா எம்பியாக ஆவதற்கு ஆசைப்படுகிறார். இந்த நாட்டின் சட்டங்கள் தேச துரோகிக்கு வேட்புமனுவை அங்கீகரிக்குமா என்று பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்? மேலும் எரிவாயு எடுக்கும் திட்டங்களில் எதிர்க்கட்சி வீண் பிரச்சனைகளை ஏற்படுத்தி மக்களிடம் பொய் பிரச்சாரங்களை செய்து மத்திய அரசுக்கு அவப்பெயர் ஏற்படுத்த முயல்கின்றனர் எனவும் குற்றம் சாட்டினார். செய்தியாளர் சந்திப்பின்போது பாஜக மாவட்ட பொதுச் செயலாளர் விஜயகுமார், ஒன்றிய தலைவர் பாலாஜி குருக்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

பேட்டி :- எஸ்.ஆர்.சேகர் - பாஜக மாநில பொருளாளர்.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.