ஒவ்வொரு ஊரிலும் தவித்த வாய்க்கு தண்ணீர் கொடுப்பதில் முன்னே நிற்பது டீக்கடைகள்தான். குறிப்பாக தமிழ்நாட்டில் அவசரத்திற்கு டீக்கடை ஆள்களே முன்வந்து தண்ணீர் கொடுத்து உதவுவர். குழந்தைகளுக்கோ, பெரியவர்களுக்கோ வெந்நீர் கேட்டால் டீ, டிகாஷன் போடுவதற்கு எந்நேரமும் பாய்லரில் சூடாகிக்கொண்டே இருக்கும் வெந்நீரை தயக்கமின்றி எடுத்துக்கொடுப்பார்கள்.
இந்நிலையில் மயிலாடுதுறை பட்டமங்கல கடைவீதியிலுள்ள டீக்கடை பதாகை ஒன்றில் “கேஸ் விலை ஏற்றம் காரணமாக அரை லிட்டர் வெந்நீர் - 10 ரூபாய், ஒரு லிட்டர் வெந்நீர்- 20 ரூபாய். வெந்நீர் இலவசம் இல்லை. இவண்: நந்தா காபி பார்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
2014ஆம் ஆண்டு உணவகங்கள், டீக்கடைகளில் உபயோகப்படுத்தும் 19 கி.கி. எடைகொண்ட கமர்சியல் எரிவாயு சிலிண்டர் விலை 1050 ரூபாய் என்று விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், தற்போது 1800 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: சாலையில் சென்று கொண்டிருந்த லாரியில் தீடீர் தீ!