ETV Bharat / state

வரலாற்றை மாற்றுவதும், திரிப்பதுமான வேலைகள் நடக்கிறது: எழுத்தாளர் உதயசங்கர் வேதனை - இளைய தலைமுறையினர் புத்தகம் வாசிக்க வேண்டும்

வரலாற்றையும், வரலாற்று நூல்களையும் இளைய தலைமுறையினர் வாசித்து புதிதாக எழுதும் திறனை வளர்த்து கொள்ள வேண்டும் என பால புரஸ்கார் விருது பெற்ற எழுத்தாளர் உதயசங்கர் கருத்து தெரிவித்துள்ளார்.

“இளைய தலைமுறையினர் வரலாற்று நூல்களை வாசிக்க வேண்டும்” - பாலபுரஸ்கார் விருது பெற்ற எழுத்தாளர் உதயசங்கர் கோரிக்கை

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 27, 2023, 8:24 PM IST

“இளைய தலைமுறையினர் வரலாற்று நூல்களை வாசிக்க வேண்டும்” - பாலபுரஸ்கார் விருது பெற்ற எழுத்தாளர் உதயசங்கர் கோரிக்கை

மயிலாடுதுறை: மயிலாடுதுறை சில்வர் ஜூப்ளி மெட்ரிகுலேஷன் பள்ளியில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் மயிலாடுதுறை மாவட்ட குழு சார்பாக வாசிப்பு இயக்கம் துவக்க விழா இன்று (ஆகஸ்ட் 27) நடைபெற்றது. மாவட்ட தலைவர் ராசா ராமன் தலைமையில் நடைபெற்ற விழாவில் சாகித்திய அகாடமி அமைப்பின் பால புரஸ்கர் விருது பெற்ற எழுத்தாளர் உதயசங்கர், மாநில துணைத்தலைவர் கவிஞர் நந்தலாலா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இதில் வாசிப்பிற்கும் விவாதத்திற்கும் என்ற தலைப்பில் எழுத்தாளர் உதயசங்கரின்சாகித்ய அகாடமியின் பால புரஸ்கார் விருது பெற்ற ஆதனின் பொம்மை (சிறார் நூல்) விவாதிக்கப்பட்டது. பின்னர் ஆதனின் பொம்மை நூலை எழுதிய எழுத்தாளர் உதயசங்கர் செய்தியாளர்களிடம் பேசுகையில், “ இன்றைய தலைமுறையில் பொதுவாக வாசிப்பு திறன் குறைந்து விட்டதாக குற்றச்சாட்டு உள்ளது. தமிழக அரசு மாவட்டம் தோறும் புத்தகக் கண்காட்சியை நடத்தி வருகிறது. இளைய தலைமுறையினரிடம் வாசிப்புத் திறனை ஏற்படுத்துவதற்காக ஆசிரியர்கள் பெற்றோர்கள் இலக்கிய அமைப்பினர் உள்ளிட்ட அனைவருமே அதற்கான பணிகளைச் செய்ய வேண்டும்.

வரலாற்றையும், அறிவியலையும் அறிந்து கொள்ள வேண்டிய முக்கியமான காலகட்டத்தில் நாம் உள்ளோம். இடையிடையே வரலாற்றை மாற்றுவதும் திரிப்பதுமான வேலைகள் நடந்து கொண்டே உள்ளது. கட்டுக் கதைகளை உண்மை என்று நம்ப வைக்கும் வேலைகளும் நடந்து கொண்டிருக்கிறது. அதை நாம் பிரித்து அறிந்து கொள்ள வேண்டுமென்றால் நம்முடைய வரலாற்றையும் வரலாற்று நூல்களையும் தெரிந்து கொண்டால் அதற்கு அறிவியல் துணை நிற்கும்.

இதையும் படிங்க: எண்ணும் எழுத்தும் திட்டத்தை 3வது நபர்களை வைத்து ஆய்வு செய்வதா? - ஆசிரியர்கள் கொந்தளிப்பு

அறிவியலும் வரலாறும் ஒன்றாகவே சேர்ந்து பயணிக்கக் கூடிய ஒரு பணியைச் செய்து கொண்டுள்ளது. இந்தியாவிற்குள் முதன்முதலாக வந்தவர்கள் யார் என்ற கேள்வி வந்தபோது ஏராளமான கட்டுக் கதைகள் சொல்லப்பட்டாலும், அறிவியல் அந்த இடத்தில் முதன் முதலாக ஆதி இந்தியர்கள் இந்தியாவிற்கு வந்தது யார் என்று கவுனிங் ஜோசப் என்ற ஆய்வறிஞர் மூலமாக வெளிப்பட்டது.

அதேபோல் சிந்துவெளியில் வாழ்ந்த மக்கள் எங்கே சென்றார்கள் அவர்கள் யார் என்ற கேள்வி எழுந்த போது பாலகிருஷ்ணன் ஐஏஎஸ் எழுதிய நூலின் மூலம் வெளிப்பட்டது. அறிவியலும் வரலாறும் இணைந்து மனிதக் குல நாகரீகத்தைக் குறிப்பாக இந்திய நாகரிக வரலாற்றைப் புதிதாகச் சொல்கின்ற வேலை தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.இதை இளைய தலைமுறையினரிடம் கொண்டு செல்ல வேண்டும். இளைய தலைமுறையினர் புத்தகங்களை வாசித்து புதிதாக எழுதும் திறனை வளர்த்து சரியான வரலாற்றை புதிதாக புனைவாக கதைகளாக எழுதுபவர்களாக மாற வேண்டும்” என்று கூறினார்.

2023ம் ஆண்டுக்கான சாகித்ய அகாடமி வழங்கும் பால சாகித்ய புரஸ்கார் விருது கடந்த ஜூன் மாதம் அறிவிக்கப்பட்டது. அந்த வகையில் கீழடி அகழாய்வை பின்னணியாக கொண்டு எழுதப்பட்ட 'ஆதனின் பொம்மை' என்ற நாவலுக்காக எழுத்தாளர் உதயசங்கருக்கு பால சாகித்ய புரஸ்கார் விருது வழங்கப்பட்டது என்பது குறிப்பிடதக்கது.

இதையும் படிங்க: திசையன்விளை அரசு மருத்துவமனையில் அமைச்சர் திடீர் ஆய்வு - வசமாக சிக்கிய மருத்துவர்கள்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.