ETV Bharat / state

“நடிகை குஷ்பு அனாவசியமாக பேசுகிறார்”.. பகுஜன் சமாஜ் கட்சி மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங்! - அதிமுக

Actress Kushboo: நடிகை குஷ்பு அனாவசியமாக பேசுகிறார், குஷ்பு சொல்லும் நோக்கம் தவறாக உள்ளது என பகுஜன் சமாஜ் கட்சி மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் தெரிவித்தார்.

Bahujan Samaj Party state president Armstrong
பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங்
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 30, 2023, 9:13 AM IST

மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள காளி கிராமத்தைச் சேர்ந்த பகுஜன் சமாஜ் கட்சியின் தேசியப் பொருளாளர் ஸ்ரீதரின் தந்தை ராமச்சந்திரன், கடந்த நவ.8-ஆம் தேதி இறந்ததை அடுத்து, நேற்று அவருக்கு படத்திறப்பு விழா நிகழ்ச்சி நடைபெற்றது. கட்சியின் மாநிலத் துணைத் தலைவர் ராஜவேல் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கலந்து கொண்டு, ராமச்சந்திரன் படத்தை திறந்து வைத்து மாலை அணிவித்து, மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் பேசியதாவது, “தமிழ்நாட்டில் பகுஜன் சமாஜ் கட்சி நாடாளுமன்றத் தேர்தலில் தனித்து போட்டியிடும். புதுச்சேரி உள்பட 40 தொகுதிகளில் தனித்து போட்டியிடும். எஸ்சி, எஸ்டி மக்கள் மீது அடக்குமுறை நடைபெறுகிறது. திமுக, அதிமுக ஆட்சியில் மக்களை ஒடுக்குமுறைக்கு ஆளாக்குகின்றனர். சாதியற்ற சமூகத்தை உருவாக்க வேணடும்.

நடிகை குஷ்பு அனாவசியமாக பேசுகிறார். குஷ்பு செல்லும் நோக்கம் தவறாக உள்ளது. மன்னிப்பும் கேட்கவில்லை, தவறாக வந்துவிட்டது என்று கூட சொல்லவில்லை. அவர் 16 வயதில் சினிமாவில் நடிக்க வந்தவர். கிராமத்தில் இருக்கக்கூடிய பெண்களை சந்தித்திருந்தால் தெரியும். சினிமா மாயையில்தான் தமிழகம் இருந்து வருகிறது. குஷ்பு மட்டுமல்ல, எந்த அரசியல் கட்சியினரும் ஒடுக்குமுறையைப் பின்பற்றுவது கண்டிக்கத்தக்கது.

எஸ்.சி, எஸ்.டி சட்டம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். சாதிப் பெயரைச் சொல்லி திட்டினால் மட்டும்தான் அந்த பிரிவின் கீழ் வழக்கு என்பது இல்லை. ஒடுக்குமுறைகளைப் பின்பற்றினாலும் அந்த சட்டத்தின்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்" எனத் தெரிவித்தார்.

மேலும், இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் மதியழகன், வழக்கறிஞர் கிருஷ்ணராஜ், மாவட்ட பொதுச் செயலாளர் இளஞ்செழியன், குத்தாலம் நகரச் செயலாளர் கௌதமன் மற்றும் நிர்வாகிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க: கடம்பூரில் அறுவடைக்குத் தயாரான மக்காச்சோளக் கதிர்களை நாசப்படுத்திய யானைகள்.. விவசாயிகள் வேதனை!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.