மயிலாடுதுறை: சீர்காழி காவல் நிலையத்தில் சிறப்பு காவல் ஆய்வாளராக பணிபுரிந்து வருபவர் அர்ஜூனன். இவரிடம் புத்தூரை சேர்ந்த மணிமாறன் என்பவர், தன்னை வழிமறித்து அதே பகுதியை சேர்ந்த வினோத் என்பவர் கொலை மிரட்டல் விடுத்ததாக புகார் அளித்திருந்தார்.
அதன் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த செய்த சிறப்பு உதவி காவல் ஆய்வாளரர் அர்ஜுனன், மணிமாறன் மற்றும் எதிர்தரப்பை சேர்ந்த வினோத் என்பவரை காவல் நிலையம் அழைத்து விசாரணை மேற்கொண்டார். விசாரணையில், வினோத்திற்கு ஆதரவாக தைக்கால் பகுதியைச் சேர்ந்த செந்தில் என்பவர் கொலை மிரட்டல் விடுத்தது தெரியவந்தது.
குடும்பத்தோடு காலி
இதனையடுத்து, அர்ஜுனன், ரவுடி செந்திலை தொலைபேசியில் தொடர்பு கொண்டு வழக்கு விசாரணைக்காக அழைத்துள்ளார். அப்போது தொலைபேசியில் ஆய்வாளரை ஆபாசமாக பேசிய செந்தில் கடுஞ்சொற்களால் திட்டி, அவருக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.
மேலும் “தன்னை இனிமேல் விசாரித்தால், அரை மணி நேரத்தில் குடும்பத்தோடு காலி செய்து விடுவேன்” என கடுமையாக பேசி மிரட்டியுள்ளார். இந்த ஆடியோ தற்போது இணையத்தில் பரவி வருகிறது.
இந்நிலையில், ரவுடி செந்தில் மீது, காவல் உதவி ஆய்வாளர் அர்ஜுனன், சீர்காழி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன் அடிப்படையில், வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், தலைவறைவான ரவுடி செந்திலை தேடி வருகின்றனர்.