ETV Bharat / state

நடுக்கடலில் ரூ.6 லட்சம் மதிப்புள்ள வலைகள் பறிப்பு - இலங்கை கடற்கொள்ளையர்கள் அட்டூழியம்

நடுக்கடலில் கத்தியை காட்டி மிரட்டி, 6 லட்சம் ரூபாய் மதிப்புள்ள வலைகளை இலங்கை கடற்கொள்ளையர்கள் பறித்துச் சென்றதாக நாகை மீனவர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

இலங்கை கடற்கொள்ளையர்கள் அட்டூழியம்
இலங்கை கடற்கொள்ளையர்கள் அட்டூழியம்
author img

By

Published : Sep 6, 2021, 6:37 AM IST

நாகப்பட்டினம்: மீன்பிடித் துறைமுகத்திலிருந்து கீச்சாங்குப்பம் அக்கரைப்பேட்டையைச் சேர்ந்த மீனவர்கள் பைபர் படகில் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர்.

அவர்கள் கோடியக்கரை தென் கிழக்கே 12 நாட்டிக்கல் மைல் தொலைவில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது இரண்டு அதிவேக படகுகளில் 9 இலங்கை கடற்கொள்ளையர்கள் வந்துள்ளனர்.

கீச்சாங்குப்பம் செல்வகுமார் என்பவருக்கு சொந்தமான பைபர் படகை சுற்றி வளைத்த கொள்ளையர்கள், அதில் இருந்த கிருஷ்ணராஜ், வேலு, முத்துக்குமார், ரவீந்தர் ஆகிய மீனவர்களை கத்தியை காட்டி மிரட்டியுள்ளனர்.

இலங்கை கடற்கொள்ளையர்கள் அட்டூழியம்

பின்னர் நான்கு லட்சம் ரூபாய் மதிப்புள்ள வலைகளை பறித்துச் சென்றனர்.

இதேபோன்று தட்சிணா மூர்த்தி என்பவருக்கு சொந்தமான பைபர் படகையும் கொள்ளையர்கள் சுற்றி வளைத்துள்ளனர். அந்த படகில் இருந்தும் இரண்டு லட்சம் ரூபாய் மதிப்புள்ள வலைகளை பறித்துச் சென்றனர்.

இதையும் படிங்க: பூம்புகார் மீனவர்கள் சுருக்குமடி வலைக்கு அனுமதி அளிக்க கோரிக்கை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.