ETV Bharat / state

கிராம மக்களுக்கு இலவச மருத்துவ முகாம்: முன்னாள் பள்ளி மாணவர்கள் அசத்தல்! - செம்பனார்கோயிலில் முன்னாள் பள்ளி மாணவர்கள் நடத்திய இலவச மருத்துவ முகாம்

நாகை: செம்பனார்கோயில் பகுதியில் பள்ளியில் ஒன்றாகப் படித்து தற்போது மருத்துவர்களாக பணிபுரியும் முன்னாள் மாணவர்கள் ஒன்றிணைந்து பொதுமக்களுக்காக இலவச மருத்துவ முகாம் நடத்தினர்.

இலவச முகாம்
author img

By

Published : Oct 6, 2019, 12:03 PM IST

நாகை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா செம்பனார்கோயில் பகுதியில் அமைந்துள்ள தனியார் பள்ளியில் பத்தாண்டுகளுக்கு முன்பு படித்த மாணவ, மாணவிகளில் ஏழு பேர் தற்போது தேனி, கோவை, சென்னை, தஞ்சை உள்ளிட்ட தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் மருத்துவர்களாகப் பணியாற்றி வருகின்றனர்.

இவர்கள் தங்களிம் வாட்ஸ் அப் மூலம் சமீபத்தில் ஒன்றிணைந்து தாங்கள் படித்த பள்ளி மூலம், அப்பகுதி பொதுமக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற நோக்கில் அவர்கள் படித்த பள்ளியில் இலவச மருத்துவ முகாமை நடத்தினர். அதில் பொது மருத்துவம், பல் மருத்துவம், இரத்தப் பரிசோதனை, எக்ஸ்ரே, இசிஜி உள்ளிட்ட பல்வேறு சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.

இலவச மருத்துவ முகாம்

பரிசோதனை முடிந்தவர்களுக்கு மருத்துவ ஆலோசனைகளை வழங்கி, பள்ளியுடன் இணைந்து தேவையான மருந்துப்பொருட்களை வழங்கினர். மேல் சிகிச்சை தேவைப்படுபவர்களுக்கு அரசின் மருத்துவக் காப்பீடு திட்டத்தின் கீழ் மருத்துவ சிகிச்சை அளிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டது. நீண்ட காலம் கழித்து தங்கள் பள்ளிக்கு வருகை புரிந்தது மனதுக்கு நிறைவாக இருந்ததாகவம், மலரும் நினைவுகளுடன் தங்கள் பகுதி மக்களுக்கு சேவை புரிந்ததாகவும் பெருமிதத்துடன் தெரிவித்தனர்.

மருத்துவர்களின் பேட்டி

மேலும் படிக்க: 'உயிர் காக்கும் மருந்துகளுக்கு ஜிஎஸ்டி வரி விதிக்கக் கூடாது'

மேலும் பார்க்க: 95 வயது பட்டம்மாளின் கதை!

Intro:செம்பனார்கோயில் பள்ளியில் படித்து தற்போது மருத்துவர்களாக பணிபுரியும் முன்னாள் மாணவர்கள் வாட்ஸ்அப் மூலம், ஒன்றினைந்து பொதுமக்களுக்காக நடத்திய இலவசமருத்துவமுகாம்:-Body:நாகை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா செம்பனார்கோயிலில் அமைந்துள்ள தனியார் பள்ளியில் 10ஆண்டுகளுக்கு முன்பு படித்த மாணவ, மாணவிகளில் 7பேர் தற்போது மருத்துவர்களாக பணிபுரிந்து வருகின்றனர். பொதுமருத்துவம், கண்மருத்துவம், பல்மருத்துவம் ஆகிய பிரிவுகளில் மருத்துவர்களாக தேனி, கோவை, சென்னை, தஞ்சை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பணியாற்றி வருகின்றனர். இவர்கள் சமூக வலைதளமான வாட்ஸ் அப் மூலம் சமீபத்தில் ஒன்றிணைந்துள்ளனர். தாங்கள் படித்த பள்ளி மூலம், அப்பகுதி பொதுமக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற நோக்கில் இன்று அவர்கள் படித்த பள்ளியில் இலவச மருத்துவ முகாம் நடத்தினர். பள்ளி நிர்வாகத்துடன் இணைந்து, பொது மருத்துவம், பல் மருத்துவம், இரத்தப்பரிசோதனை, எ எக்ஸ்ரே, இசிஜி சோதனை ஆகியவை மேற்கொள்ளப்பட்டன. பரிசோதனை முடிந்தவர்களுக்கு மருத்துவ ஆலோசனைகளை வழங்கி, பள்ளியுடன் இணைந்து தேவையான மருந்துப்பொருட்களை வழங்கினர். மேல் சிகிச்சை தேவைப்படுபவர்களுக்கு அரசின் மருத்துவகாப்பீடு திட்டத்தின் கீழ் மருத்துவ சிகிச்சை அளிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டது. நீண்ட காலம் கழித்து தங்கள் பள்ளிக்கு வருகை புரிந்தது மனதுக்கு நிறைவாக இருந்ததாகவம், மலரும் நினைவுகளுடன் தங்கள் பகுதி மக்களுக்கு சேவை புரிந்ததாகவும் பெருமிதத்துடன் தெரிவித்தனர்.

பேட்டி: மருத்துவர்களாக பணிபுரியும் முன்னாள் மாணவர்கள் இருவர் பேட்டி உள்ளது.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.